பொது செய்தி

இந்தியா

மாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய ஆயுதப்படை கட்டணம் உயர்வு

Added : அக் 11, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி:பல்வேறு பணிகளுக்காக மாநிலங்களுக்கு அனுப்பப்படும், மத்திய ஆயுதப் படைகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

நம்மிடம், சி.ஆர்.பி.எப்., - மத்திய ரிசர்வ் போலீஸ் படை, பி.எஸ்.எப்., - எல்லை பாதுகாப்பு படை, எஸ்.எஸ்.பி., - எல்லை பாதுகாப்பு ஆயுதப் படை, ஐ.டி.பி.பி., - இந்தோ - திபெத் எல்லை போலீஸ், சி.ஐ.எஸ்.எப்., - மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவை உள்ளன.மாநிலங்களில் பயங்கரவாதம், கலவரம் ஏற்படும் நேரங்களில், இப்படைகளை, மத்திய அரசிடமிருந்து கேட்டு வாங்கிப் பயன்படுத்துவது, மாநிலங்களின் நடைமுறை.இதற்கென, மாநிலங்களிடம் இருந்து,
ஆண்டுக் கட்டணமாக தற்போது, 13 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது, வரும்,23 - 24 ஆண்டிலிருந்து, 22 கோடி ரூபாயாக உயருகிறது. அதிக ஆபத்து மற்றும் கடுமையான பிரச்னை உள்ள மாநிலங்களிடம் இருந்து, 34 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது; இது, 42 கோடி ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

ஏற்கனவே, கட்டண பாக்கி வைத்துள்ள மாநிலங்கள், தொகையை, உடனடியாக செலுத்த வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம், கடிதமும் எழுதியுள்ளது.இந்த கட்டணம் முழுதும், மக்களின் வரிப் பணத்திலிருந்து செலவிடப்படுவதால், கலவரம் துாண்டுவோருக்கு ஆதரவாகச் செயல்படுவதைத் தவிர்க்க, மக்கள் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
11-அக்-201911:00:34 IST Report Abuse
RajanRajan மக்களின் வரிப்பணம் லஞ்ச ஊழல்களுக்கு ஈடு கொடுத்து பாதுகாப்பு பிரச்சினைக்கும் தீர்வு காணும் வரை நிர்வாக செலவுகளை மக்கள் ஏற்க வேண்டி உள்ளது. எத்தனை ஒரு இக்கட்டான வாழ்க்கை முறையில் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள் நம்மை ஆட்சி புரிந்தவர்கள். அரசு இன்னும் ஏன் ஊழல்வாதிகள் திருட்டு பணத்தை சூறையாடி அரசு கஜானாவில் சேர்க்க தயங்குகிறது. வாழ்க ஜனநாயகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X