பொது செய்தி

இந்தியா

தீபாவளிக்கு பின் வேலை நிறுத்தம் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் முடிவு

Added : அக் 11, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி:இரண்டு மாத சம்பளம் பாக்கி வைத்துள்ளதையடுத்து, பி.எஸ்.என்.எல்., - எம்.டி.என்.எல்., ஊழியர்கள், தீபாவளிக்கு பின், வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

பி.எஸ்.என்.எல்., எனப்படும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்; எம்.டி.என்.எல்., எனப்படும், மஹாநகர் டெலிகாம் நிகாம் லிமிடெட் நிறுவனங்களின் ஊழியர் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் கூறியதாவது:பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஊழியர்களுக்கு, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. தீபாவளி நேரத்தில் சம்பளம் தராதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை பார்த்து, நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. சம்பள பாக்கியை உடன் வழங்க கோரி, டில்லி மற்றும் மும்பையில், 16ம் தேதியன்று, உணவு இடைளையின் போது, ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்குள் சம்பள பாக்கியை வழங்காவிட்டால், அதன்பின், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
11-அக்-201914:50:06 IST Report Abuse
.Dr.A.Joseph இவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.அரசு பணியில் இருப்பவனை போராட அனுமதிக்க கூடாது.தனியார் தொழிலாளர்கள் போராடினால் ஆதரிக்கலாம்.அதில் நியாயம் உண்டு.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
11-அக்-201910:40:46 IST Report Abuse
RajanRajan எப்ப இந்த BSNL கடையை இழுத்து முடுவீங்களாம் ? சட்டு புட்டுன்னு வேலையை முடிங்கப்பா. உங்களாலே அது முடியில்லீன்னா மொத்தத்தையும் அந்த முன்னாள் ஒயர் திருடனிடமே கொடுத்து பார்த்துக்க சொல்லுங்க.
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
11-அக்-201902:43:59 IST Report Abuse
rajesh நீங்க வேலை செஞ்சிட்டாலும்....... மொதல்ல இந்த bsnl ல இழுத்து மூடனும்..... காலையில 10:30 மணிக்கு வர்றது 11:00 மணிக்கு கான்டீன் அங்கே அரட்டை அடிக்க வேண்டியது அப்பறம் அரை மணி நேரம் வேலை செய்றமாதிரி செஞ்சிட்டு 1 மணிக்கு மதிய சாப்பாடு 3:30 மணிக்கு திரும்பி வந்துட்டு அரை மணி நேரத்துல வீட்டுக்கு கெளம்பி poidavendiyadhu தான்...... 80 bsnl ஊழியர்கள் இதை தான் பின்பற்றி வருகிறர்கள்..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X