பொது செய்தி

இந்தியா

150 ரயில்கள், 50 ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க சிறப்பு குழு

Added : அக் 11, 2019
Advertisement

புதுடில்லி:நாடு முழுவதும், 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களின் செயல்பாடுகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக, உயர் அதிகாரம் உடைய சிறப்பு குழுவை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

ரயில் போக்குவரத்தின் தரத்தை உலகத் தரம் வாய்ந்ததாக மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக, டில்லி - லக்னோ இடையேயான தேஜாஸ் அதிவேக ரயில் சேவை, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 50 ரயில் நிலையங்களையும், 150 ரயில்களின் செயல்பாடு களையும், குத்தகை அடிப்படையில், தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக, உயர் அதிகாரம் உடைய சிறப்பு குழுவை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, நிடி - ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்ட், ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவுக்கு கடிதம் எழுதிஉள்ளார். சிறப்பு குழுவில், அமிதாப் கான்ட், யாதவ் ஆகியோரின் பெயர்களும், பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் செயலர், வீட்டு வசதித் துறை அமைச்சக்தின் செயலர் ஆகியோரும் இடம் பெறுவர் என தெரிகிறது.

இது குறித்து, அமிதாப் கான்ட் கூறியதாவது: நாடு முழுவதும், 400 ரயில் நிலையங்களை உலகத் தரம் வாய்ந்தவையாக மேம்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது, முதலில், 50 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், 150 ரயில்களின் சேவையும் மேம்படுத்தப்படவுள்ளது. சமீபத்தில், ஆறு விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்த பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அதுபோல், ரயில்வே துறையிலும் குழு அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X