மாமல்லபுரம் : பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை வரவேற்க மாமல்லபுரத்தில் பஞ்ச ரதங்களுக்கு அருகே தோட்டக்கலை துறை சார்பில் பிரம்மாண்ட அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலையை சேர்ந்த ஏறக்குறைய 200 பணியாளர்கள், சுமார் 10 மணிநேரம் பணியாற்றி இந்த பிரம்மாண்ட அலங்கார வளைவை தயார் செய்துள்ளனர். சுமார் 18 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு இந்த அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக காய்கறிகள் மற்றும் பழங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

இது பற்றி தோட்டக்கலை கூடுதல் இயக்குனர் தமிழ்வேந்தன் கூறுகையில், இந்த அலங்கார வளைவு அமைக்க பயன்படுத்திய காய்கறிகள் மற்றும் பழங்களில் பெரும்பாலானவை இயற்கை முறையில் வளர்க்கப்பட்டு, பண்ணைகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டவை. இது தவிர பாரம்பரியமான வாழை மரங்கள், கடற்கரை கோயில் அருகே வைக்கப்பட்டுள்ளது. அலங்காரத்திற்காக சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜாக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE