பொது செய்தி

இந்தியா

சீனாவில் உள்ள தமிழ் கலாசார சின்னங்கள்

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பதற்கு டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெரு நகரங்கள் தேர்வு செய்யப்படாமல், தமிழகத்தில் உள்ள கடற்கரை நகரமான மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது.மோடி-ஜின்பிங் சந்திப்பிற்கு மாமல்லபுரம் தேர்வு

புதுடில்லி: இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பதற்கு டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெரு நகரங்கள் தேர்வு செய்யப்படாமல், தமிழகத்தில் உள்ள கடற்கரை நகரமான மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது.latest tamil newsமோடி-ஜின்பிங் சந்திப்பிற்கு மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் இருப்பது, தமிழகம் மற்றும் சீனாவிற்கு இடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வரும் கலாச்சார, வர்த்தக, கட்டடக்கலை தொடர்புகள் தான். இரண்டாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் இருந்து சென்ற பல்லவ மற்றும் சோழ மன்னர்கள் கடல்கடந்து, சீனா வரை தங்களின் கலாச்சார வேரை பரப்பி இருந்ததுள்ளனர்.
சீனாவின் கிழக்கு பகுதியான குவான்ஷூ (Quanzhou) நகரில் இப்போதும் அதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. சீனாவின் பல்வேறு பகுதிகளில் தமிழ் கலாச்சாரம் பரவி இருந்தாலும், குவான்ஷூ நகரில் உள்ள பல கோயில்கள் தமிழகம் மற்றும் சீனாவிற்கு இடையேயான சுமார் 1700 ஆண்டு உறவுக்கு சான்றாக உள்ளன.


latest tamil news


தமிழகத்தில் இருப்பது போன்று குவான்ஷூ நகரில் உள்ள கட்டடக்கலை, கோயில் தூண்கள், அவற்றில் உள்ள சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. பல்லவ கட்டட கலைக்கு பெரிய அடையாளமாக விளங்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் உள்ளது போன்ற மகாலட்சுமி, நரசிம்மர், சிவலிங்கம், மகாவிஷ்ணு சிற்பங்கள் குவான்ஷூ நகரிலும் உள்ளன. நடராஜர், நர்த்தன கிருஷ்ணர், கஜேந்திர மோட்சம், கிருஷ்ண லீலை காட்சிகள் போன்றவை உள்ளன.


latest tamil news


மேலும் தாமரை, சிங்க வடிவங்களும் இடம்பெற்றுள்ளதை சீன தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சங்கு, சக்கரத்துடன் 4 கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி தரும் மகாவிஷ்ணு சிலை இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
குவான்ஷூ நகர் மட்டுமின்றி சீனா முழுவதிலும் இதுவரை ஏறக்குறைய 500 க்கும் அதிகமான நந்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மகாலட்சுமி, சிவலிங்கம் ஆகிய சிலைகள் இப்போதும் அங்குள்ள கோயில்களில் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஏராளமானோர் வழிபட்டு செல்கின்றனர்.


latest tamil newsஇது தவிர சீனாவில் உள்ள புராதான தலங்களில் உள்ள பல கல்வெட்டுக்களில் தமிழ் மற்றும் சீன எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை தமிழகம் மற்றும் சீனா இடையேயான வர்த்தக, கலாச்சார, மத உறவையும், சோழ வம்சத்தின் பெருமையையும் காட்டுவதாக உள்ளன. சீனா - தமிழகம், குறிப்பாக சோழ மற்றும் பல்லவ வம்சத்தினரிடையே பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ள பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாகவே இருநாட்டு தலைவர்கள் சந்திக்கும் வரலாற்று நிகழ்விற்காக மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
12-அக்-201904:39:59 IST Report Abuse
Palanisamy T இந்திய வரலாற்றில் தமிழகம் மற்றும் சீனாவிற்கு இடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கலாச்சார, வர்த்தக தொடர்புகள் இருந்ததை இடைநிலைப் பள்ளிகளில் சரித்திரப் பாடங்களில் படித்தது இன்றும் நினைவிலுள்ளது அப்போது ஆங்கிலமே போதனா மொழியாகயிருந்தது இன்று வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தைப் பார்க்கும் போது பழமையான நினைவுகள் இன்னும் இனிமையாகவேயுள்ளது சுற்றுப் பயணிகளின் வருகையை மேலும் காத்திடவும் மேம்படுத்திடவும் மாமல்லபுரத்தின் தூய்மையையும் சிறப்பையும் தமிழக அரசு கட்டிக் காக்கவேண்டும் சீன அதிபரின் வருகையால் மாமல்லபுரம் இப்போது இன்னும் உலகப்புகழ் பெற்றுவிட்டது இனிமேல் சுற்றுப் பயணிகளின் வருகை இன்னும் வளம் பெரும் அதிகரிக்கும். சுற்றுப் பயணத் துறை நல்ல வருமானம் ஈட்டும்துறை இந்த நல்வாய்ப்பை தமிழக அரசு நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சுற்றுப் பயனதுறை வருகையால் சிங்கப்பூர் தாய்லாந்து கம்போடியா வியட்நாம் போன்ற நாடுகள் இப்போது நல்லவளங்கள் பெற்று வளர்கின்றன. தமிழகமும் வளர வேண்டும் வளர்ச்சிப் பெற வேண்டும் இம்மாதியான அரிய வாய்ப்புக்கள் என்றாவது ஒருநாள் மட்டுமே கிடைக்கும் தமிழக அரசு இந்த அரிய வாய்ப்பை நன்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
11-அக்-201922:40:36 IST Report Abuse
natarajan s கிமு இரண்டாம் நூற்றாண்டில் அப்போதிருந்த சோழ அரசர்கள் வியட்நாம் வரை தங்களது சாம்ராஜ்யத்தை நிறுவி இருந்தார்கள் . அதென் தொடர்ச்சிதான் ஐந்தாம் நூற்றாண்டில் இருந்த champa ட்யன்ஸ்ட்டி வியட்நாம் இல் இருந்ததது. அப்போது அங்கு கட்டப்பட்ட நிறைய இந்து கோவில்கள் இன்னும் உள்ளது அதெற்குப்பின் புத்த மத பாதிப்பால் அவைகள் மறைக்கப்பட்டு விட்டன . அதென்ன ஒரு நீட்சிதான் கம்போடியாவில் உள்ள ankur Vaat . நமக்கு சரியான வரலாற்று ஆசிரியர்கள் கிடைக்கவில்லை இதையெல்லாம் ஆவணப்படுத்த . கிபி ஏழாம் நூற்றாண்டில் வந்த Hiuen Tsang தான் நமது நாட்டின் கலாச்சாரத்தை பற்றி ஆவணப்படுத்தியுள்ளார் . அதென்ன பின் வண்ணத்தை ஆங்கிலேயர்கள் எதோ அவர்கள் மட்டும்தான் இந்த நாட்டை ஆனதா மாதிரியும் மற்ற அரசர்கள் (முஸ்லீம் அரசர்கள் தவிர ) எல்லாம் தற்கொலை செய்து செத்து போய்விட்டதுபோலவும் வரலாற்றை எழுத அதை மட்டுமே படித்து நமது உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்ளாமலாயே இருந்துவிட்டோம்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
11-அக்-201918:30:29 IST Report Abuse
jagan இப்படி உலகம் முழுவதும் நண்பர்கள் கொண்ட தமிழர்களை, ராமசாமி நாயக்கரும் அவர் அடி பொடிகளும், எல்லோரையும் எதிரியாய் பார்க்கும் கூட்டமாய் ஆகிவிட்டார்கள். பக்கத்து மாநிலத்து, மற்ற மொழிக்கர்கள் என எல்லோரையும் ஏசும், எல்லோரிடம் சண்டையிடும் கூட்டமாய், வாழை மட்டையை ஆகியது. அண்ணனும் அவர் தம்பிகள் கூட்டமே....
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
11-அக்-201920:06:18 IST Report Abuse
Rajeshதமிழன்னாலே வயிதெரிச்சல்னு செய்துட்டானுங்க .............
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
12-அக்-201907:43:12 IST Report Abuse
கதிரழகன், SSLCஆன்மிகம் தமிழுக்கு சம்பாரிச்சு கொடுத்த புகழ் பெருமை எல்லாத்தையும் அழிச்சானுவ. பாரம்பரியத்து மேல பற்று இருக்கிறது பாலைவன மதத்துக்கு ஆகாது. அவிங்க கைக்கூலியா அவங்க கிட்ட ஒட்டு பிச்சை எடுக்க ஆன்மிகத்தை எதிர்த்து கெடுத்து குட்டி சுவ்ரா ஆக்கிட்டானுவ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X