ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (31)

சென்னை: சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.






மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க சீன அதிபர் ஜி ஜின்பிங், தனி விமானம் மூலம், பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு, அவருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


சென்னை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் வரவேற்க காந்திருந்தவர்கள்  .

சென்னை மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் வரவேற்க காந்திருந்தவர்கள் .




பின்னர், ஜின்பிங்கை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.


சீனாவின் அதிபர் , ஜி ஜின்பிங் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சென்னை வருவதை யொட்டி மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் வரவேற்க குழந்தையுடன் வந்த பெண்கள் . இடம் : மீனம்பாக்கம் .

சீனாவின் அதிபர் , ஜி ஜின்பிங் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சென்னை வருவதை யொட்டி மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் வரவேற்க குழந்தையுடன் வந்த பெண்கள் . இடம் : மீனம்பாக்கம் .





விமான நிலையத்தில் , ஜின்பிங்கை வரவேற்று, மேளதாளம், செண்டை மேளங்கள் இசை நிகழ்ச்சிகளுடன், மயிலாட்டம், ஒயிலாட்டம் கலைஞர்கள் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இதன் பின்னர், கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்றார்.


சீனாவின் அதிபர் , ஜின்பிங் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை வரவேற்கும் விதமாக  பா.ஜ.க.வினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேளதாளங்கள்   . இடம் : மீனம்பாக்கம் .

சீனாவின் அதிபர் , ஜின்பிங் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை வரவேற்கும் விதமாக பா.ஜ.க.வினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேளதாளங்கள் . இடம் : மீனம்பாக்கம் .



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X