பொது செய்தி

இந்தியா

இரட்டை சதம் விளாசினார் கோஹ்லி

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019
Advertisement
India, Southafrica, Test, Cricket, இந்தியா, தென் ஆப்ரிக்கா, டெஸ்ட், கிரிக்கெட்

புனே: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கேப்டன் கோஹ்லி இரட்டை அடித்து அசத்தினார். ரகானே அரைசதம் எட்டினார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் புனேயில் நடக்கிறது. 'டாஸ்' வென்று களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. இன்று(அக்.,11) இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. நிதானமாக ரன்கள் சேர்த்த ரகானே, டெஸ்டில் தனது 20வது அரைசதம் எட்டினார். கேப்டன் கோஹ்லி பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். பிலாண்டர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் 26வது சதம் எட்டினார். 4வது விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்த போது ரகானே (59), மஹராஜ் சுழலில் சிக்கினார். இது மஹராஜின் 100வது விக்கெட்டாக அமைந்தது. சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் 7வது முறையாக இரட்டை சதம் அடித்து அசத்தினார்.







7



டெஸ்ட் அரங்கில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்களில் கோஹ்லி, நான்காவது இடத்தை ஜெயவர்தனா (இலங்கை), ஹம்மண்டுடன் (இங்கிலாந்து) 4வது இடத்தை பகிர்ந்து கொண்டார். மூவரும் தலா 7 முறை இரட்டை சதம் அடித்தனர்.

* பிராட்மேன் (12, ஆஸி.,), சங்ககரா (11, இலங்கை), லாரா (9, விண்டீஸ்) முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.



பிராட்மேனை முந்தினார்



அதிக முறை 150 ரன்னுக்கும் மேல் எடுத்த கேப்டன்களில், பிராட்மேனை (8, ஆஸி.,) முந்தி முதலிடம் பெற்றார் கோஹ்லி (9). கிளார்க் (ஆஸி.,), லாரா (விண்டீஸ்), ஜெயவர்தனா (இலங்கை), கிரீம் ஸ்மித் (தெ.ஆப்.,) தலா 7 முறை இதுபோல எடுத்தனர்.

* சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்கள் எடுத்த கேப்டன்களில் கோஹ்லி (11) தான் 'டாப்'. பிராட்மேன் (8), லாரா (8) 2வதாக உள்ளனர்.

* இந்தியாவுக்காக அதிக முறை 150 ரன்னுக்கும் மேல் எடுத்த வீரர்களில் சச்சின் (20), சேவக் (14), கவாஸ்கர் (12), டிராவிட்டுக்கு (11) அடுத்த இடம் பெற்றார் கோஹலி (10).


7000 ரன்கள்



* டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் பிராட்மேனை (6996) முந்தினார் கோஹ்லி (7000*).

* அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் 7வது இடத்துக்கு முன்னேறினார் கோஹ்லி.


இதன் விபரம்



வீரர் - போட்டி - ரன்கள் - சதம்/அரைசதம்

சச்சின் - 200 - 15,921 - 51/68

டிராவிட் - 163 - 13,265 - 36/63

கவாஸ்கர் - 125 - 10,122 - 34/45

லட்சுமண் - 134 - 8,781 - 17/56

சேவக் -103 - 8,503 - 23/31

கங்குலி - 113 - 7,212- 16/35

கோஹ்லி - 81 - 7000* - 26/22

வெங்சர்க்கார்- 116 -6,868 - 17/35

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X