பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி ரசம், கவன் அரிசி அல்வா: ஜின்பிங்கிற்கு ரெடி

Updated : அக் 11, 2019 | Added : அக் 11, 2019 | கருத்துகள் (24)
Advertisement

மாமல்லபுரம் : தமிழகம் வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு 28 வகையான உணவுகளுடன் பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளார். மோடியும் ஜின்பிங்கும் மொத்தம் 6 மணிநேரம் சந்திப்பு நடத்த உள்ளனர்.





இதில் 40 நிமிடங்கள் மோடியும், ஜின்பிங்கும் தனிமையில் பேச உள்ளனர். அதன் பிறகு இரண்டு தரப்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிடப்பட உள்ளது. ஜின்பிங்கிற்கு தமிழக பாரம்பரிய முறைப்படி மேள தாளங்கள் முழங்க, வாழைமரத் தோரணங்கள் அலங்காரத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.





சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் மோடிக்கு இரவு விருந்தாக தமிழக பாரம்பரிய உணவு வழக்கப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய சைவ, அசைவ உணவுகள் இரவு விருந்தில் இடம்பெறுகின்றன. இரவு விருந்தில் பிரதமர் மோடி, சீன அதிபருடன், இருநாடுகளின் தரப்பில் தலா 8 பேர் பங்கேற்கின்றனர்.

சீன அதிபர் ஜின்பிங்கிற்கு தமிழகத்தின் தக்காளி ரசம், சாம்பார், குருமா, கவுனி அரிசி அல்வா வழங்கப்படுகிறது. விருந்தில், காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகள், அனைத்து பாரம்பரிய உணவு வகைகளும் இடம் பெறுகின்றன. நாளை காலை உணவாக, தமிழகத்தின் இட்லி, தோசை, பொங்கல், பூரி உள்ளிட்ட உணவுகள் இடம்பெறுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
12-அக்-201910:16:46 IST Report Abuse
Ray கும்பக்கோணம் டிகிரிகாபி இல்லையே
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
12-அக்-201917:48:08 IST Report Abuse
karutthuஅதற்கு பதில் சைனா டி (சென்னையில் வசிப்பவர்களுக்கு தெரியும் சைனா டி என்றால் என்ன வென்று ) வழங்கப்பட்டிருக்கும் ....
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
12-அக்-201908:50:05 IST Report Abuse
karutthu இது நடப்பது தமிழ் நாட்டில் ஆனால் தமிழக முதல்வர் , துணை முதல்வர் இவர்கள் விருந்திற்கு அழைக்கப்பட்டனரா ? இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினையும் விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Mano - Madurai,இந்தியா
12-அக்-201900:06:26 IST Report Abuse
Mano மாடு மற்றும் பன்றி கறிவகைகளை பற்றிக் குறிப்பிடவில்லையே.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
12-அக்-201904:27:15 IST Report Abuse
Sanny மாற்றத்தையும் விட்டுவிட்டீர்கள், அதுதான் பாம்பு, தவளை என்று....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X