பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் வருகையால் மகிழ்ச்சிக் கடலில் மாமல்லை!

Updated : அக் 12, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
மாமல்லபுரம்: பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் வருகையால் மாமல்லபுரமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது. சிற்ப நகரை சுற்றி வந்து ரசித்து கலை பொக்கிஷங்களை கண்டு களித்து கடற்கரை கோவிலில் மோடி அளித்த சிறப்பு விருந்தில் திளைத்தார் சீன அதிபர். வரலாற்று சிறப்பு பெற்ற இந்த சந்திப்பின் அடுத்த நிகழ்வாக இரு நாட்டுக்கு இடையிலான முக்கிய பேச்சு இன்று கோவளத்தில் நடக்கிறது. உலகின்
Mahabalipuram,Prime Minister,Narendra Modi,Chinese,President,Xi Jinping,cultural,program,Temple, UNESCO,World Heritage site

மாமல்லபுரம்: பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் வருகையால் மாமல்லபுரமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது. சிற்ப நகரை சுற்றி வந்து ரசித்து கலை பொக்கிஷங்களை கண்டு களித்து கடற்கரை கோவிலில் மோடி அளித்த சிறப்பு விருந்தில் திளைத்தார் சீன அதிபர். வரலாற்று சிறப்பு பெற்ற இந்த சந்திப்பின் அடுத்த நிகழ்வாக இரு நாட்டுக்கு இடையிலான முக்கிய பேச்சு இன்று கோவளத்தில் நடக்கிறது. உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை உள்ள முதல் இரண்டு நாடுகளின் தலைவர்கள் எளிமையான முறையில் சந்தித்ததும் சிரித்து மகிழ்ந்து உரையாடியதும் ஒட்டுமொத்த உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.


latest tamil newslatest tamil news


Advertisement


இந்திய பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கிற்கும் இடையே முறைசாரா பேச்சு இன்று மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இரு தலைவர்களும் நேற்று மாமல்லபுரம் வந்தனர். மாலை 4:05 மணிக்கு சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து சீன அதிபர் பாதுகாப்பு வாகனங்கள் சூழ பிரத்யேக காரில் புறப்பட்டார். மத்திய கைலாஷ், பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், பனையூர், கானாத்துார் வழியாக மாமல்லபுரம் சென்றார்.


latest tamil newslatest tamil newsமாலை 4:20க்கு பிரதமர் மோடி கோவளத்தில் இருந்து கிளம்பி 4:50 மணிக்கு மாமல்லபுரம் வந்தார்; 4.53க்கு அர்ச்சுனன் தபசு பகுதிக்கு வந்து இறங்கினார். தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார். மாலை 5:02 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் வந்தார். அவர் பேன்ட், சட்டை அணிந்திருந்தார்; கோட் சூட் அணியவில்லை. அவரை பிரதமர் மோடி கை குலுக்கி வரவேற்றார். இருவரும் சாலை நடுவில் நின்று சில நிமிடங்கள் பேசினர். பின் மாலை 5:06க்கு இருவரும் அர்ச்சுனன் தபசு சிற்பங்களை பார்வையிட்டனர்.


latest tamil newslatest tamil newsஅர்ச்சுனன் தபசின் வரலாறு மற்றும் சிறப்புகளை சீன அதிபருக்கு மோடி விளக்கினார். அர்ச்சுனன் தபசு மண்டபத்தில் துர்காதேவி சிலை உள்ளது. கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தன் சுண்டு விரலால் துாக்கி இந்திரனிடமிருந்து மக்களை காத்த காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றையும் பல்லவர்களுக்கும் சீனர்களுக்குமான தொடர்பை விளக்கும் சிங்க முக சிற்பங்களையும், இரு தலைவர்களும் கண்டு களித்தனர். அர்ச்சுனன் தபசு மலையை குடைந்து 1,600 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது.


latest tamil newslatest tamil newsமலையை குடைந்து அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக தவமிருந்த காட்சி; பகீரதன் கங்கையை கொண்டு வர தவமிருந்த காட்சி; புத்தர் தவம் செய்த காட்சியுடன் விலங்குகள், மனிதர்களையும் சிற்பங்களாக வடிவமைத்துள்ளனர். சீன அதிபருக்கு அர்ச்சுனன் தபசு சிறப்புகளை பிரதமர் விளக்கினார். அதன் முன் இரு தலைவர்களும் கை குலுக்கியபடி புகைப்படம் எடுத்தனர். மாலை 5:20க்கு இரு தலைவர்களும் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட்டனர். மிகப்பெரிய பாறை சிறு பிடிமானத்தில் நிற்கிறது. அந்த பாறை முன் இருவரும் கைகளை உயர்த்தியபடி புகைப்படம் எடுத்தனர். மாலை 5:27க்கு ஐந்து ரதங்களை பார்வையிட்டனர். அங்கும் கை குலுக்கியபடி புகைப்படம் எடுத்தனர்.


latest tamil newslatest tamil newsஐந்து ரதம் பகுதியில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் இரு தலைவர்களும் அமர்ந்து பேசினர். அவர்களுடன் இரு நாட்டு மொழி பெயர்ப்பாளர்கள் மட்டும் இருந்தனர். மாலை 6:00க்கு இருவரும் கடற்கரை கோவிலுக்கு சென்றனர். மின்னொளியில் ஜொலித்த கடற்கரை கோவிலை கண்டு ரசித்தனர். மாமல்லபுரம் சிற்பங்கள் பெருமைகளை சீன அதிபருக்கு பிரதமர் எடுத்துரைத்தார். மாலை 6:10க்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், வெளியுறவுத் துறை அதிகாரிகள் சீன அதிபருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.


latest tamil newslatest tamil newsஇரு தலைவர்களும் தங்கள் நாட்டின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை அறிமுகப்படுத்தி வைத்தனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. கடற்கரை கோவில் வளாகத்தில் முக்கால் மணி நேரம் நடந்த பாரம்பரிய கலை நடனங்களை பார்த்து சீன அதிபர் வெகுவாக ரசித்தார். பிரதமர் மோடியும் நடன இசைக்கேற்ப தன் இருக்கையில் அமர்ந்தபடி கைகளால் தாளமிட்டபடியே ரசித்து மகிழ்ந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு பின் சீன அதிபருக்கு கடற்கரை வெளியில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி இரவு 8:00 மணிக்கு முடிய வேண்டிய நிகழ்ச்சி 9:௦௦ மணி வரை நீடித்தது. இந்த விருந்துக்கு பின் சென்னைக்கு திரும்பிய சீன அதிபர் இன்று காலை கோவளம் வருகிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து முக்கிய பேச்சு நடத்துகிறார்.


latest tamil newslatest tamil news
வேட்டி, சட்டையில் கலக்கிய மோடி!


சீன அதிபரை சந்திக்க மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தார். தோளில் அங்கவஸ்திரமும் போட்டிருந்தார். வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் வேட்டி சட்டையில் வந்த பிரதமர் வித்தியாசமாக காணப்பட்டார். பிரதமர் நடந்து சென்றபோது அங்கவஸ்திரம் அவ்வப்போது தோளில் இருந்து நழுவியது. அதை சரி செய்தபடியே நடந்தார். புதிதாக கட்டியவர்கள் நடக்கும் போது சில நேரங்களில் தடுமாறுவர்; ஆனால் மோடி எந்த விதமான தடுமாற்றமும் இல்லாமல் கம்பீரமாக நடந்தார்.

கடற்கரை கோவிலுக்கு செல்லும் போது அங்கவஸ்திரத்தை இரண்டாக மடித்து கையில் போட்டிருந்தார். கடற்கரை கோவிலை சுற்றி பார்த்துவிட்டு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட சென்றபோது அங்க வஸ்திரத்தை மடித்து கையில் வைத்துக் கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-அக்-201919:12:26 IST Report Abuse
Pugazh V விட்டுக் கொடுக்காமல் வாழ்க்கையில் எதையும் அடையமுடியாது என்று ......தெரிகிறது ஐயா. . ஆனால் ஒரு இனத்தையே காரணமே இல்லாமல் கரித்து கொட்டுபவர்களை மாற்றவே இயலாதா? காரணமேயின்றி காயப்படுத்திக் கொண்டே இருந்தாலும் உறவு/ நட்புக்காக விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? தமிழ் பேசும் அனைவரையும் அவமதித்து எழுதுவார்கள். இந்து அல்லாத பிற அனைத்து மதத்தினரையும் அவமதிப்பார்கள்..அந்தணர் அல்லாத அனைத்து பிற ஜாதியினரும் அடங்கும் திராவிட இனத்தையே அவமதிப்பார்கள். விட்டு கொடுத்து விட வேண்டுமா? எந்த அளவுக்கு? எத்தனை காலத்துக்கு? // அன்புள்ள ந.நல்லவன் பார்வைக்கும், பிற வாசகர்கள் சிந்தனை க்கும். // நன்றி
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
12-அக்-201919:08:22 IST Report Abuse
Sampath Kumar அப்படி யாரும் மகிழந்ததா தெரியலே
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-அக்-201919:05:43 IST Report Abuse
Pugazh V காட்டுத்தனமாக வெட்டி விட்டதால் மீண்டும் :: "திருட்டு திராவிட அரசர்கள் அமைத்த சிற்பங்களைப் பார்க்க சீன அதிபர் என்றல்லவா எழுதியிருக்க வேண்டும்? ஹா ஹா ஹா"/ யதார்த்தம் சுடுகிறது? கசக்கிறது? பாவம்
Rate this:
visu - paris,பிரான்ஸ்
12-அக்-201922:52:23 IST Report Abuse
visuசிவ சிவா …..பல்லவன் கட்டிய கோவிலுக்கும் பகுத்தறிவு த்ராவிடனுக்கும் என்ன தொடர்பு? ஜெய் ஸ்ரீராம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X