பொது செய்தி

இந்தியா

சொகுசு விமானம், 2.5 ஏக்கர் பங்களா, 'பாலிவுட்' விருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த 'ரியல் எஸ்டேட்' அதிபர்

Added : அக் 12, 2019 | கருத்துகள் (17)
Advertisement
 சொகுசு விமானம், 2.5 ஏக்கர் பங்களா, 'பாலிவுட்' விருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த 'ரியல் எஸ்டேட்' அதிபர்

மும்பை:மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, எச்.டி.ஐ.எல்., 'ரியல் எஸ்டேட்' நிறுவன இயக்குனர், சாரங் வதாவனுக்கு சொந்தமான, மேலும் ஒரு சொகுசு விமானத்தை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த, எச்.டி.ஐ.எல்., எனப்படும் வீட்டுவசதி மற்றும் கட்டுமானம் என்ற, 'ரியல் எஸ்டேட்' நிறுவனம், பி.எம்.சி., எனப்படும், பஞ்சாப் - மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில், 6,500 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது.இந்த வழக்கில், எச்.டி.ஐ.எல்., நிறுவன நிர்வாக இயக்குனர் ராகேஷ் வதாவன், அவரது மகன் சாரங் வதாவன் ஆகியோரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சமீபத்தில் கைது செய்தனர்.

அவர்களுக்கு சொந்தமான, 3,500 கோடி ரூபாய் சொத்துக்கள், பறிமுதல் செய்யப்பட்டன. சாரங் வதாவனுக்கு சொந்தமான, 'பம்பார்டியர் சேலஞ்சர் - 300' என்ற, ஒன்பது பேர் அமர்ந்து செல்லக் கூடிய சொகுசு விமானத்தை, அதிகாரிகள் சமீபத்தில் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பான விசாரணையின் போது, சாரங்குக்கு சொந்தமாக மேலும் ஒரு விமானம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, 'பால்கன்' ரக சொகுசு விமானத்தை, அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

மேலும், மும்பையின் கடற்கரை பகுதியான அலிபாக்கில், சாரங் வதாவனுக்கு, 2.5 ஏக்கர் பரப்பளவில், 22 அறைகளுடன் கூடிய கடற்கரை சொகுசு பங்களா இருப்பது தெரியவந்துள்ளது. இங்கு, 'ஆடி' உட்பட, விலை உயர்ந்த மூன்று சொகுசு கார்கள், கரடு முரடான மலைப் பாதைககளில் ஓட்டக்கூடிய, 'டெரைன் மோட்டார் பைக்'குகள், ஒரு விரைவுப்படகு ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கடற்கரை பங்களாவில், பிரபல 'பாலிவுட்' நட்சத்திரங்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிகள், அடிக்கடி நிகழும் என்றும், அதை, சாரங் வதாவன் மற்றும் அவரது மனைவி அனு ஆகியோர் ஏற்பாடு செய்வதும் தெரியவந்தது. பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களுடன், சாரங்கும் அவரது மனைவியும், விருந்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், அந்த பங்களாவில் இடம் பெற்றுள்ளது.

சாரங் வதாவனின் தாயார் மற்றும் மனைவி அனு ஆகியோரிடம், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அந்த கடற்கரை பங்களாவை பறிமுதல் செய்யும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
17-அக்-201907:19:17 IST Report Abuse
Raj இப்போது புரிகிறது திரைப்படங்கள் நன்றாக வசூல் செய்தால் எப்படி இவர்களுடைய பொருளாதாரம் முன்னேறுமென்பது.
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
18-அக்-201901:19:50 IST Report Abuse
Balajiஇதனால் தாங்கள் கூற விழையும் கருத்து என்னவோ அரசரே? ரெம்ப அறிவா பேசினதா நெனப்போ?...
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
15-அக்-201906:12:14 IST Report Abuse
Anandan மக்கள் பணம் வங்கியில் இருப்பது இப்படி மகாராஷ்டிரம், குஜராத் மோசடி தொழிலதிபர்களுக்கும், மற்றும் தொழிலதிபர்களின் வராக்கடன்களுக்குமே இந்த 6 ஆண்டுகளில் அதிகம் சென்றுள்ளது. இதிலே தேஷ்பக்தியும், வந்தேமாதரமாம்.
Rate this:
Share this comment
G Mahalingam - Delhi,இந்தியா
17-அக்-201906:35:35 IST Report Abuse
G  Mahalingam2008 முதல் இந்த ஊழல் நடைபெறுகிறது. இப்ப தான் பிடிபடுகிறார்கள்....
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
18-அக்-201901:17:34 IST Report Abuse
Balajiவணக்கம் ஆனந்து ஜாமி. இந்த ஊறல் எப்போ இருந்து நடக்குதுன்னு கொஞ்சம் பாத்துக்கனோம். அப்புறம் இதுல பவார் சாப் சம்பந்தப்பட்டிருக்கலாம்னும் ஜொல்லுறாங்க. அப்புறம் இந்த மெரி மகாராஷ்டிரா குஜராத் னு பிரிச்சி பேசப்படாது. என்னமோ தமிழ்நாட்ல ஒரே புத்தர்களா நடமாடிட்டிருக்காமேறி. நம்ம பொருளாதார மேதை சேடம்பரம் தமிழர்தேன்....
Rate this:
Share this comment
18-அக்-201915:30:13 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்உனக்கு தேச பக்தி இல்லை , வந்தேமாதரமும் சொல்லமாட்டாய், அதற்கும் இந்த ஆள் பிடிபட்டதற்கும் என்ன சம்பந்தம் , இந்தாள் எங்கேயாவது நான் தேசபக்தன் என்று சொல்லி இருக்கிறாரா ? பகலிலேயே பசுமாடு தெரியாது உனக்கு , இரவில் எருமை மாட்டை தேடுகிறாயா ?...
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
18-அக்-201919:58:55 IST Report Abuse
madhavan rajanஎவ்வளவு நாட்களாக கொள்ளையடித்தாலும் இப்போதுதானே பிடிபடுகிறான். இதே காங்கிரஸ் ஆட்சியில் பிடிபட்டால் கமிஷன் பெற்றுக்கொண்டு அமுக்கிவிடுவார்கள். பல காலமாக செய்து வந்ததில் காங்கிரசின் பங்கு நிச்சயமாக இருக்கும். சந்தேகமேவேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel
விமர்சகன் - kovai,இந்தியா
14-அக்-201918:56:22 IST Report Abuse
விமர்சகன் மோடி போன்ற ஒரு துணிச்சலான பிரதமர் இருப்பதால்தான் இது போன்ற வங்கி பணத்தை மோசடி செய்த திருடர்களை பிடித்து உள்ளே தள்ள முடிகிறது. இது மட்டும் போதாது சிதம்பரத்தின் மேல் வலுவான பிரிவுகளின் கீழ் வழக்கு போடுங்கள்.அவர் காலத்தில் நீரவ் மோடி,ராஜ் ஸ்ரீ சுகர் போன்ற நிறுவனங்களுக்கு வரம்பு மீறி கடன் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் காலத்தில்தான் கடன் வாங்கியவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதை என் போன்றவர்கள் காண்கிறோம். தொடருங்கள் உங்கள் அதிரடியை
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
17-அக்-201909:03:35 IST Report Abuse
karutthuவிஜய் மல்லயா நீரவ் மோடி இவர்கள் இன்னும் இங்கிலாந்தில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர் .அதுவும் விஜய் மல்லயா இரண்டு பெண்களின் தோள்மீது கைபோட்டுக்கொண்டு திரிகிறான் இதே மோடி அவர்கள் அவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறார் ....
Rate this:
Share this comment
Balaji - Chennai,இந்தியா
18-அக்-201901:18:54 IST Report Abuse
Balajiகருத்து கண்டஜாமி அவர்களே, அவனுங்க வெளிநாட்டில இருக்க சொல்லோ அந்த நாட்டு சட்டத்துக்குட்பட்டு தேன் நடவடிக்கை எடுக்க முடியும். கொஞ்சம் மன்னிச்சுக்கோங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X