பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுத பூஜையில் 30 டன் பூசணி விற்ற தம்பதி: வறுமையை உடைத்து விவசாயத்தில் சாதிப்பு

Added : அக் 12, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சேலம்:சொந்த நிலம், வீடு இல்லாத நிலையில், விவசாயத்தில் சாதித்து வரும் தம்பதி, ஆயுத பூஜை அன்று மட்டும், 30 டன் வெள்ளை பூசணிக்காயை விற்றுள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகே, நல்லியம்பாளையத்தைச் சேர்ந்த, ஜெயவேல் மகன், சவுந்தர், 28. ஜெயவேல், தள்ளுவண்டியில் வாழைப்பழம், முட்டை விற்கிறார்.ஆலோசனைசவுந்தர், ஈரோடு, பவானி சாகரில் உள்ள, எம்.எஸ்.சுவாமிநாதன் இன்ஸ்டிடியூட் ஆப்
 ஆயுத பூஜையில் 30 டன் பூசணி விற்ற தம்பதி: வறுமையை உடைத்து விவசாயத்தில் சாதிப்பு

சேலம்:சொந்த நிலம், வீடு இல்லாத நிலையில், விவசாயத்தில் சாதித்து வரும் தம்பதி, ஆயுத பூஜை அன்று மட்டும், 30 டன் வெள்ளை பூசணிக்காயை விற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகே, நல்லியம்பாளையத்தைச் சேர்ந்த, ஜெயவேல் மகன், சவுந்தர், 28. ஜெயவேல், தள்ளுவண்டியில் வாழைப்பழம், முட்டை விற்கிறார்.ஆலோசனைசவுந்தர், ஈரோடு, பவானி சாகரில் உள்ள, எம்.எஸ்.சுவாமிநாதன் இன்ஸ்டிடியூட் ஆப் அக்ரிகல்சர் கல்லுாரியில், 2009 - 11ல், விவசாயத்தில் டிப்ளமா படித்தார்.

தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், கபிலர்மலையில், தற்காலிக விவசாய களப்பணியில் ஈடுபட்டார்.பின், சொந்த காலில் நிற்க முடிவு செய்தார்; ஆனால், நிலம் இல்லாததோடு, தொழில் செய்ய பணமும் இல்லை. வெள்ளை பூசணி, வெள்ளரி, சாம்பல் பூசணி உள்ளிட்டவற்றின் விதைகளை வாங்கி கொடுத்து, அப்பகுதி விவசாயிகளுக்கு விளைச்சலை அதிகரிக்க, ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், அவர்கள் விளைவிக்கும் காய்களை கொள்முதல் செய்து, பெரிய வியாபாரிகளுக்கு வினியோகித்தார்.அந்த வருவாய் மூலம், குத்தகைக்கு நிலம் வாங்கி, படிப்பில் கிடைத்த நுட்பங்களை பயன்படுத்தி, வெள்ளை பூசணிக்காய் விளைவித்தார்.தனியார் பள்ளியில், ஆசிரியராக உள்ள, அவரது மனைவி, ஷோபியா, 25, கணவருக்கு உதவியாக, விவசாய பணியில் ஈடுபடுகிறார்.

ஆயுத பூஜை அன்று மட்டும், 30 டன் வெள்ளை பூசணிக்காயை, விவசாயி களிடம் கொள்முதல் செய்து, பல்வேறு மார்க்கெட்டுக்களுக்கு விற்பனைக்கு அனுப்பினர்.மகசூல்இது குறித்து, சவுந்தர் கூறியதாவது: வாடகை வீட்டில், வசிக்கிறோம். விவசாயத்துக்கு, சொந்த நிலம் தேவை என்பது, பெரிய பிரச்னை இல்லை.படித்த தொழில்நுட்பத்தை, விவசாயிகளிடம் சேர்க்க வேண்டும் என்பதே நோக்கம்.

முதலில், குறைந்த அளவில், விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதிகளவில் மகசூலை ஈட்டினேன்.குறிப்பாக, வெள்ளை பூசணிக்காய், 110 நாளில், மகசூல் கொடுக்க கூடியது என்பதால், அதை தேர்வு செய்து, வெற்றி பெற்றேன். அதை பார்த்து பலர், என்னை பின்பற்ற துவங்கினர். அவர்களுக்கு தரமான விதை, உரத்தை ஏற்பாடு செய்து கொடுப்பதோடு, விளைவிக்கும் பொருட்களை வாங்கி சந்தைப்படுத்துவதால், இப்பகுதியில், காய்கறி பயிரிடுவோரின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளது.

தற்போது, 6 ஏக்கர் நிலத்தை, குத்தகைக்கு எடுத்து, புது தொழில்நுட்பம் மூலம், காய்கறி பயிரிட உள்ளேன்.இளைஞர்கள்என்னை போன்ற இளைஞர்கள், அரசு வேலைக்கு காத்திருக்காமல், விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, விவசாயத்தில் ஈடுபட்டாலோ, பிற விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுக்க நினைத்தாலோ, ஆலோசனை வழங்க தயாராக உள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார். ஆலோசனை பெறவும், பாராட்டவும் நினைப்போர், சவுந்தரை, 90037 99919 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
16-அக்-201919:15:30 IST Report Abuse
spr இவரனையர் பாராட்டுக்குரியவர்கள் படித்து வேலை இல்லை என்றோ படித்த படிப்புக்கு தக்க வேலையில்லை என்றோ சோம்பி இருக்காமல் சாதித்த இவரைப் பாராட்ட இதர இளைஞர்களும் இவரைப் பின்பற்றி சாதிக்க வேண்டும் வெளிநாட்டில் இதன் தேவை அதிகம் இருக்கிறது விளைபொருட்களை தக்க வகையில் (பழச்சாறு, பூசணி அல்வா, சட்னி எனப் பலவகையில்) உருமாற்றி, மதிப்புக் கூட்டப்பட்ட இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்ய குளிர்பதனக் கிடங்கு, போக்குவரத்து வசதி ஏற்றுமதிக்கான வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்தல், சந்தைப்படுத்தல் எனப் பலவகையில் மத்திய மாநில அரசும் உதவி செய்ய வேண்டும் அதுவே முறையான பாராட்டு
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
16-அக்-201905:01:15 IST Report Abuse
Sanny பொதுவாக தனது தொழில் நுணுக்கங்களை மற்றவர்களுக்கு சொல்லாமல் இருப்பவர்கள் தான் பலர், ஆனால் தான் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறுக என்று அந்த நுணுக்கங்களை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. வாழ்த்துக்கள் தம்பி.
Rate this:
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
15-அக்-201913:49:44 IST Report Abuse
Rangiem N Annamalai கைகுலுக்கி பாராட்டுகிறேன் .இந்த கடிதம் மூலம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X