பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய - சீன தலைவர்கள் இன்று 3 மணி நேரம் பேச்சு

Updated : அக் 12, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (12)
Advertisement
இந்திய - சீன தலைவர்கள்

சென்னை:சென்னை வந்துள்ள சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும், இன்று மாமல்லபுரத்தில், மூன்று மணி நேரம், பேச்சு நடத்த உள்ளனர். பேச்சில், இரு நாடுகள் தரப்பிலும், தலா எட்டு பேர் பங்கேற்கின்றனர்.

இரண்டு நாள் பயணமாக, சென்னை வந்துள்ள சீன அதிபர் ஸீ ஜின்பிங், நேற்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டார். அவருக்கு, பிரதமர் மோடியும், மத்திய அரசின் தொல்லியல் துறை உயரதிகாரிகளும், தமிழக புராதன சின்னங்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை விளக்கினர்.

முன்னதாக, சென்னை வந்திறங்கிய சீன அதிபருக்கு, இந்திய மற்றும் சீன வகை பாரம்பரிய உணவு வகைகள், மதிய உணவாக வழங்கப்பட்டன. இரவில்,தமிழகத்தின் சைவ, அசைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டன. குறிப்பாக, அதிக காரம் இல்லாத உணவு வகைகள் இடம் பெற்றன. மதிய உணவில், தக்காளி ரசம், தமிழக செட்டிநாடு வகை உணவுகள் மற்றும் சிக்கன் உணவுகள் இடம் பெற்றன. இன்றைய இரண்டாம் நாள் சந்திப்பில், காலை உணவுக்கு பின், இரு தரப்பினரும், முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு நடத்துகின்றனர்.
இது குறித்து, இந்திய வெளியுறவு துறை உயர் அதிகாரி ரவேஷ் குமார் கூறுகையில், ''இரு தரப்பிலும், இன்று மூன்று மணி நேரம் பேச்சு நடத்தப்படும்,'' என்றார்.இந்திய, சீன தலைவர்கள் இடையிலான இன்றைய சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், 40 நிமிடங்கள், தனியாக பேச்சு நடத்த உள்ளனர்.

இந்த சந்திப்பில், மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் தனி செயலர்கள் மட்டுமே இடம் பெற உள்ளனர்.அதேநேரம், காலை, 10:00 மணிக்கு, இரு தரப்பின், அதிகார மட்டத்திலான பேச்சு துவங்கும். பிற்பகல், 2:00 மணி வரை, இந்த பேச்சு நீடிக்க வாய்ப்புள்ளது. எவ்வளவு நேரம் பேச்சு நடத்தப்படும் என்பது, சூழலை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது. இந்தியா மற்றும் சீனா தரப்பில், இரண்டு தலைவர்களுடனும், தலா எட்டு பேர் அடங்கிய குழுவினர் பங்கேற்க உள்ளனர்.இந்திய உயர்மட்ட குழுவில், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு துறை செயலர் விஜய் கோகலே, சீனாவுக்கான இந்திய துாதர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

சீனா தரப்பில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்டிக்கல் பீரோ மத்திய கமிட்டி உறுப்பினர் டிங் சுவேஸியாங், வெளிநாட்டு விவகாரத் துறை ஆணைய உறுப்பினர் யங் செய்ச்சி, அரசியல் ஆலோசனை வெளிநாட்டு விவகாரத் துறை அமைச்சர் வாங் யி, சீன பொதுமக்கள் ஆலோசனை கமிட்டியின் தலைவரும், தேசிய வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு ஆணைய தலைவருமான ஹி லைபெங் ஆகியோர் இடம் பெறுவர்.


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-201910:31:08 IST Report Abuse
Janarthanan நேற்று விவாத மேடையில் பாக்கிகள் சீனாவிடம் எப்படி மாட்டி கொண்டு இருக்கிறார்கள் என்பதை கூறி கொண்டு இருந்தார்கள் , சீனா அவர்கள் நாட்டில் செய்யும் முதலீட்டுக்கும் கொடுக்கும் கடனுக்கும் ,பாக்கிகள் சீனாவிற்கு நிலங்களை 99 வருடங்களுக்கு குத்தகை கொடுக்க வேண்டுமாம் , அதை போல் சீனா மொழி மாண்டரின் கட்டாய கற்க /கற்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளதமாம் ?? இனி வளர போகும் பாக்கிகள் வாரிசுகள் சீன மொழி கற்று கொள்ளும் கட்டாயத்தில் உள்ளார்களாம் ??? சீனா அவர்கள் நாட்டில் உள்ள முஸ்லீம் வாலை நறுக்கி வைத்து உள்ளது போல பக்கிகளையும் நறுக்கி வைப்பார்கள் , ஜிஹாதிகள் எல்லாம் 72 பார்க்க அனுப்பி வைக்க படுவார்கள் ???? பாக்கிகள் இந்தியாவை எதிர்க்கிறேன் என்று சீனாவிற்கு அடிமையாக மாறி கொண்டு இருக்கிறார்கள் ???
Rate this:
Share this comment
Cancel
RR Iyengar - Bangalore,இந்தியா
12-அக்-201909:25:59 IST Report Abuse
RR Iyengar இடுகாடு என்பது ஹிந்துக்களைப் பொறுத்தவரை தீட்டு...அங்கு சென்று வர நேரிட்டால் குளிக்காமல் வீட்டுக்குள் நுழைய மாட்டார்கள்... நல்ல நாள் , பண்டிகை தினங்கள் , வீட்டில் ஏதாவது விசேஷம் நடக்கும் சமயமென்றால் , நெருங்கிய உறவு என்றாலும் தவிர்க்கவே பார்ப்பார்கள்... ஆனால் , ஹிந்து பெரும்பான்மை தேசமான இந்தியாவில் இதுவரை நடைமுறை எப்படி? பிற நாட்டுத் தலைவர்கள் யார் இந்தியாவுக்கு வந்தாலும் அவர்களை முதலில் அழைத்துச் செல்லும் இடம் காந்தி சமாதி ....அங்கு மலரஞ்சலி...பின் சர்வமத பிரார்த்தனை என்னும் சடங்கு...அதன் பிறகு வரிசையாக நேரு சமாதி , இந்திரா காந்தி - ராஜீவ் காந்தி சமாதிகளில் மலரஞ்சலி... அதன்பிறகு டெல்லி அசோகா ஓட்டலில் அல்லது பாராளுமன்ற வளாகத்தில் ஏதாவது ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல்... அதன் பிறகு இன்னொரு பெரிய சமாதிக்குச்செல்வார்கள்...அதுதான் தாஜ் மஹால்...அங்கு சென்று போட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு பிறகு மீண்டும் ஏதாவது ஒரு சந்திப்பு அல்லது கலை நிகழ்ச்சி.... அதன் பிறகு அப்படியே விமானம் ஏறி விடுவார்கள்.... ஆகமொத்தம் இந்தியாவுக்கு வருகை என்றாலே சுடுகாடுகளுக்குப்போவது தான் முதலும் கடைசியுமான வேலை.... அப்புறம் எப்படி உருப்படும் ? ஆனால் டெல்லிக்கு வெளியே , சமாதிகளைத்தாண்டி ஒரு இந்தியா இருக்கிறது என்பதை உலகுக்கு காட்ட மோதி அவர்கள் வரவேண்டியிருக்கிறது... இதற்கு முன்பு சீன அதிபர் வந்தபோது அவரை குஜராத் அழைத்துச் சென்றார் ....ஜப்பான் பிரதமரோடு காசியில் கங்கா ஹாரத்தி நடத்தினார்... .இந்த முறை தமிழகத்தின் கடற்கரை கோவிலுக்கு அழைத்து வந்திருக்கிறார் மோடி..கலை நிகழ்ச்சிகளிலும் இராமாயணம்... இந்த தேசத்தின் பண்பாடு , மரபு , கலாச்சாரம் எல்லாமே ஆன்மீகம்தான்...அதை மீண்டும் மீண்டும் உலகத்தோர் முன் எடுத்துக்காட்டுவதில் கவனமாக இருக்கிறார் மோடி.. இந்த ஒரு காரணத்துக்காகவே அவரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201909:23:39 IST Report Abuse
ஆப்பு நம்ம தலை என்னதான் உற்சாகமாக பேசுனாலும் சீன அதிபர் ஒரு புன்னகை, சிரிப்பு கூட இல்லாம வலம் வந்ததை யாரும் கவனிச்சாங்களா? இல்லே சீனாக்காரங்க எல்லோருமே இப்பிடித்தானா?
Rate this:
Share this comment
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-அக்-201910:15:01 IST Report Abuse
Janarthananஅடேய், ஆப்பு மேல இருக்கும் போட்டோவை பாரு ?? அதில் அவர் சிரித்து கொண்டு இருக்கிறார் தெரிய வில்லையா ??? உன் மனநிலை அப்படி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X