பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரத்தை தேர்வு செய்தது மோடி தான்!

Updated : அக் 12, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (47)
Share
Advertisement
PM Modi, Modi, Jingping, Xi Jingping, Mamallapuram, China, chinese president, Tamil Nadu, TN, மாமல்லபுரம், பிரதமர் மோடி, மோடி, ஸி ஜின்பிங், தமிழகம், சீனா,சீன அதிபர்,

புதுடில்லி: தமிழகம், சீனா இடையேயான வரலாற்று தொடர்புகளை அறிந்து, சீன அதிபருடனான சந்திப்புக்கு பிரதமர் மோடியே, மாமல்லபுரத்தை தேர்வு செய்த தகவல் வெளியாகியுள்ளது.

சீன அதிபர் ஸீ ஜின்பிங் நேற்று இந்தியா வந்தார். தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில், சீன அதிபர் ஷி ஜின்பிங் - பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடந்தது. நாட்டில் எத்தனையோ பெருநகரங்கள், பாரம்பரிய பெருமைமிக்க இடங்கள் பல இருந்தும், தமிழகத்தின் கடற்கரை சுற்றுலா தலமான மாமல்லபுரம், இந்த சந்திப்புக்கு தேர்வு செய்யப்பட்டது,


latest tamil news


தமிழகத்துக்கு பெருமை. இதற்கு காரணம், மாமல்லபுரத்தின் வரலாற்று பெருமை தான். இதை நன்கு உணர்ந்த பிரதமர் மோடி, தாமாகவே மாமல்லபுரத்தை தேர்வு செய்துள்ளார். அவரது சொந்த தொகுதி வாரணாசி மற்றும் குஜராத்தில் சில நகரங்கள் குறித்து, அதிகாரிகள் அவருக்கு பரிந்துரைத்தும், மாமல்லபுரத்தையே அவர் தேர்வு செய்தார்.

ஏழு மற்றும் எட்டாம் நுாற்றாண்டுகளில் பல்லவர் காலத்து புகழ்மிக்க கடற்கரை நகரமான மாமல்லபுரத்துக்கு சீனாவுடன் வரலாற்று தொடர்பும் உண்டு. பண்டைய காலத்தில் சீனாவுடன் வணிக தொடர்பு வைத்திருந்த நகரங்களில் மாமல்லபுரமும் ஒன்று. வெளிநாட்டு ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்துக்கு நுழைவுவாயிலாக இருந்தது.


latest tamil newsஇது குறித்து சீன அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டபோது, இந்த வரலாற்று தொடர்புகளை கருத்தில் கொண்டு சீன நிர்வாகமும், மாமல்லபுரத்துக்கு ஒப்புதல் அளித்தது. சீனாவின் வெளியுறவு இணை அமைச்சரும், முன்னாள் இந்திய துாதருமான லுப் ஜாஹூயி மாமல்லபுரம் குறித்து நன்கு அறிந்திருந்தார். அவரும் சீன அதிபர் அலுவலகத்துக்கு சாதகசான தகவல் அளிக்க, உடனடியாக மாமல்லபுரத்துக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது.இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியால், மாமல்லபுரமும் புதுப்பொலிவு பெற்று, சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆல்வின், பெங்களூர் திமுக அடிவருடிகள் தண்டேன் நுகரா மண்டுகங்கள்.
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
12-அக்-201920:08:10 IST Report Abuse
Viswam மஹாபலிபுரம் ஒன்பதாம் நூற்றாண்டு வரை சீனத்துடன் வியாபாரம் புரிவதற்கான துறைமுகமாக திகழ்ந்துள்ளது. சரித்திரம் தெரிந்த சீனர்கள் இதை நினைவுகூர்ந்து இங்கே வருவதில் நமது பிரதமருக்கு ஆக்ஷேபணை தெரிவிக்காமல் உடன் ஒத்துக்கொண்டுள்ளார்கள். கழக குஞ்சுமணிகள் போன தடவை இதே சீன அதிபரை அஹமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடி அழைத்து சென்ற போது என்னவெல்லாம் வாந்தி எடுத்தார்கள் என்று பழைய பக்கங்களை பார்த்தாலே போதும். பிரதமர் மோடி இந்த பக்கம் வரவேமாட்டார் என்று நினைத்ததில் எள்ளு இறைத்து, தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து தமிழ் உணவுகளை மெனுவில் கொண்டுவந்து, அதே சீன அதிபரையும் இங்கு கொண்டுவந்து தெலுங்கு கட்டுமர வாரிசுகளை வாய் புளிக்கும்படி செய்துவிட்டார். அதனால்தான் துர்க்கா சுடாலின் எதிர்காலம் வேண்டி திருப்பதி சென்றாரோ ? ஒன்று நிச்சயம் - மக்களின் நாடித்துடிப்பை மோடிபோல உணர்ந்தவர்கள் கிடையாது. காலம் இந்த உன்னத தலைவரின் ஆட்சியை போற்றும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. மோடி பார் 2024 வித் 400 சீட்ஸ்
Rate this:
Nethiadi - Chennai ,இந்தியா
13-அக்-201913:39:44 IST Report Abuse
Nethiadi காலம் இந்த உன்னதமான தலைவரை என்னவெல்லாம் செய்ய போகிறதோ..அய்யகோ முடியல உங்க சொம்பு....
Rate this:
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
12-அக்-201919:46:53 IST Report Abuse
Nallavan Nallavan Pugazh some imbalance. That is not physcal.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X