பொது செய்தி

இந்தியா

'கோ பேக் மோடி' டிரெண்டிங் : பின்னணியில் பாக்.,

Updated : அக் 12, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (95)
Advertisement

புதுடில்லி : டுவிட்டரில் சமீப காலமாக டிரெண்டிங் ஆகிய வரும் # GoBackModi ஹேஷ்டாக்கை பாக்.,ஐ சேர்ந்தவர்கள் உருவாக்கியது தெரிய வந்துள்ளது.






பிரதமர் மோடி தமிழகம் வரும் போது எல்லாம் டுவிட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, அது இந்திய அளவில் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களை போல் தற்போதும் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, தமிழகம் வந்துள்ளதால் #GoBackModi ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளதால் இம்முறை இந்திய இறையாண்மைக்கு எதிரான இத்தகைய செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை விசாரணை துவக்கியது.




இதில், பாக்.,ஐ சேர்ந்த சிலர் பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து இந்த ஹேஷ்டாக்கை உருவாக்கி, ஒவ்வொரு முறையும் டிரெண்டிங் ஆக்கி வருவது தெரிய வந்துள்ளது. மேலும், தமிழ் மற்றும் தமிழகம் மீது அதீத பாசம் கொண்டிருப்பது போன்ற கருத்துக்களையும் அவ்வப் போது பதிவிட்டு வருகின்றனர். #GoBackModi ஹேஷ்டாக்கை டிரெண்டிங் ஆக்கியது போன்று பாக்., மற்றும் சீனாவுக்கு ஆதரவான ஹேஷ்டாக்குகளையும் உருவாக்கி இவர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

மோடி, தமிழகம் வரும் போது மட்டும் இத்தகைய ஹேஷ்டாக்குகள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்படுவதால், இதன் பின்னணியில் திமுக இருக்கலாம் என முதலில் உளவுத்துறை சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தி எதிர்ப்பு, திராவிட கொள்கை காரணமாக கூட திமுக.,வினர் இத்தகைய ஹேஷ்டாக்கை உருவாக்கி இருக்கலாம் என சந்தேகித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உளவுத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியதில், இதன் பின்னணியில் பாக்., இருப்பது தெளிவாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madurai.2020 - Madurai,இந்தியா
13-அக்-201912:00:55 IST Report Abuse
Madurai.2020 ஏன்டா இப்படி அடிச்சிக்குறேங்க
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
12-அக்-201922:50:13 IST Report Abuse
Rajas பாக்கிஸ்தான் தான் இதன் பின்னல் இருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கு இவ்வளவு வருடமா? கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த ஒரு மாணவனை செக் செய்ய சொல்லியிருந்தால் கூட 1 மணி நேரத்தில் கண்டு பிடித்திருப்பானே. இந்த லட்சணத்தில் இதை செய்வோம் அதை செய்வோம் என்று ஜம்பம் வேறு.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
12-அக்-201922:03:45 IST Report Abuse
sridhar @புகழ்.. நல்லா இருந்த தேசத்தை... பின்ன எதுக்கு 2014 ல் காங்கிரெஸ்ஸை எட்டி உதைத்து வெளியே எறிந்தார்கள். 2019 ல் மீண்டும் Modi ஆட்சி தான் வேண்டும் என்றார்கள் மக்கள் . பச்சை கண்ணாடியை கழட்டுங்கள். உண்மை தெரியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X