பொது செய்தி

தமிழ்நாடு

கடற்கரையை சுத்தம் செய்த மோடி

Updated : அக் 12, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (282)
Advertisement
மோடி, குப்பை, தூய்மைப்பணி,  மாமல்லபுரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபயிற்சியின் போது, அங்கு குவிந்திருந்த குப்பைகளை பிரதமர் மோடி வெறும் கைகளால் அகற்றினார்.
கோவளம் கடற்கரையில் குப்பைகளை கையால் சுத்தம் செய்த மோடி

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இதற்காக மாமல்லபுரத்தில் தாஜ்பிஷர்மேன் கோவ் ஓட்டலில் மோடி தங்கியுள்ளார். நேற்று, மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று சிற்பங்களை ஜின்பிங்குடன் சுற்றிபார்த்த மோடி, அதன் சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார்.
Advertisement

இந்நிலையில், இன்று(அக்., 12) காலை மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் 30 நிமிடம் நடைபயிற்சியில் ஈடுபட்டார்.


அப்போது, கடற்கரையில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகளை வெறும் கைகளால் அள்ளி, தூய்மை பணியில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ள மோடி, அதில் கூறியுள்ளதாவது: மாமல்லபுரத்தில் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டேன். இது 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, கடற்கரையில் இருந்த குப்பைகளை சேகரித்து ஓட்டல் ஊழியர் ஜெயராஜிடம் கொடுத்தேன். பொது இடங்களை சுத்தமாகவும் தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்வோம். நாம் ஆரோக்கியத்துடனும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதையும் உறுதி செய்வோம் என பதிவிட்டுள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (282)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
13-அக்-201911:48:06 IST Report Abuse
Anandan வரிசையா குப்பை அள்ளிய பைகளை வச்சுருக்காங்க ஆனால் அங்க அங்க கொஞ்சம் குப்பை அட நம்ம பிரதமர் சில குப்பை பைகள் கிட்ட இருந்துகூட குப்பையை எடுக்கிறார் பா, அப்படியே புல்லரிச்சு போச்சு. குப்பையை எடுத்த பின்னும் ஆங்காங்கே கொஞ்சம் குப்பை செம டச்.
Rate this:
Share this comment
Cancel
V Balamurali - Chennai,இந்தியா
13-அக்-201903:15:47 IST Report Abuse
V Balamurali உலக தலைவர்கள் பிரசித்தி பெற்ற இடத்தில் கூடி பேசி கருத்துக்களை பரிமாறி பல உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதென்பது இப்போதெல்லாம் ஓர் நிகழ்ச்சியக நடைபெறுகிறது. நம் தமிழ்நாட்டு விவசாயிகளையும், காவிரி பிர்ச்சனைகளையும், விவச்சயிகளின் கோரிக்கிகளையும் டில்லியில் பல போராட்டங்கள் நடத்தியபோதும், தமிழ் நாட்டு மகக்ளின் உணர்வுகளை சிறிதும் கண்டுகொள்ளாத திரு, மோடி அவர்கள், இன்று இங்கு வந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய உடைகளை உடுத்துவதும், உணவுகளை சாப்பிடுவதும் தமிழ்நாட்டு மக்களை கவரும் ஒர் அரசியல் நாடாகமாகவே எண்ணத்தோன்றுகிறது. மேலும் ஓர் பிரதமர் வருகையின் போது பல பாதுகாப்பு ஏற்பாடுகளும், அவசர அவசரமாக வழித்தடங்களை சீரமைப்பதும் நடைபெறும் போது, அதிகாரிகளும், பாதுகாவலர்களும் கடற்கரையில் வீணாக குப்பைகளை இருக்க விட்டிருப்பார்களா. வாசகர் கூறிய கருத்தினப்போல திரு மோடி அவர்களும் ஓர் சாதரண அரசியல்வாதி போல பெருமைக்காக நடந்து கொள்வது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இவற்றையெல்லாம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாநில மக்களின் கருத்துக்களயும், குறைக்ளையும் அவர்களின் பிரதிநிதிகளுடன் நேரில் கேட்டறிந்து ஆவன செய்யவேண்டும் என்பதே நம் மக்களின் கோரிக்கையாகும்.
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
13-அக்-201911:27:45 IST Report Abuse
Anandanஉங்களுக்கு தேசபக்தி இருந்தால் இப்படி ஒரு பிரதமரை சந்தேகிப்பீர்களா? அட, பலருக்கும் இதே சந்தேகம்....
Rate this:
Share this comment
சீனு, கூடுவாஞ்சேரிதில்லியில் நமது விவசாயிகள் செய்த மாபெரும் ஷோ தீயசக்திகளின் ஆதரவில் நடந்தது. கண்டுகொள்ளாமல் விட்டதால் புஸ் ஆகியது....
Rate this:
Share this comment
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-அக்-201900:30:52 IST Report Abuse
Ramesh R சுத்தம் செய்தீர்கள் - ஓகே, அதை ஏன் படம் போட்டு காட்டுகிறீர்கள்? இதுதான் புரியவில்லை.
Rate this:
Share this comment
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
13-அக்-201904:25:04 IST Report Abuse
Maheshஒவ்வொருவருக்கும் அந்த கடமை உள்ளது என்று புரிய வைப்பதற்கு......
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
13-அக்-201911:28:16 IST Report Abuse
Anandan//சுத்தம் செய்தீர்கள் - ஓகே, அதை ஏன் படம் போட்டு காட்டுகிறீர்கள்? இதுதான் புரியவில்லை.// சுத்தம் செய்ததே அதுக்குத்தானே....
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
13-அக்-201911:29:53 IST Report Abuse
Anandanஇனி பாருங்கள் நாலு குப்பையை அள்ளிவிட்டு அதையும் படம் பிடித்து இணையத்தில் போட்டுவிட்டு எனக்கும் தேசபக்தி வந்துடிச்சுனு எவ்வளவு பேர் போடப்போறாங்கனு, அட, அதுக்காவது உதவுதே இந்த செய்தி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X