பொது செய்தி

தமிழ்நாடு

பிரபலமாகும் ‛பிளாக்கிங்'

Updated : அக் 12, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (25)
Advertisement

சென்னை : பணியாளர்களை கொண்டு குப்பைகளை அள்ளும் பணியை சென்னை மாநகராட்சி துவக்கி உள்ளது. இதனால் ஓட்டப் பயிற்சியுடன், குப்பைகளை அள்ளும் குழுக்கள் தற்போது அதிகரித்து வருகின்றன இதற்கு ‛பிளாக்கிங்' Plogging என்று பெயர்.





சென்னையில் சமீப காலமாக Plogging என்ற சொல், ஓட்டப் பயிற்சி செய்யும் சமூகத்தினரிடையே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டப்பயிற்சி செய்வோர் தாங்கள் செல்லும் பாதைகளில் இருக்கும் குப்பைகளை எடுப்பது அல்லது ஓட்டப் பயிற்சிக்கு பிறகு குப்பைகளை சேகரித்து அதை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனை ஓட்டப் பயிற்சி செய்பவர்கள் மட்டுமின்றி, சென்னை மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள தூய்மைப் பணி செய்யும் தன்னார்வ குழுக்களும் செய்கின்றன.





உள்ளூர்வாசிகள் சிலரும் தங்களின் சுற்றுப்புறத்தை தூய்மை செய்யும் பணியை மேற்கொள்ள plogging ஐ பின்பற்ற துவங்கி உள்ளனர். தற்போது இந்த plogging குழுக்களில் உறுப்பினர்களாக இணைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உடல் ஆரோக்கியத்துடன் தூய்மை பணியும் செய்ய முடிவதால் நேரம் மிச்சமாவதாக உணர்வதாக இதில் ஈடுபடுவோர் தெரிவித்துள்ளனர். plogging 10 கி.மீ., ஐ உள்ளடக்கியதாக உள்ளதாகவும், இதனை முடிக்க 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் ஆவதாக கூறுகின்றனர். plogging உடன் 3 முதல் 4 மணி நேரம் பயணித்து அரை மாரத்தான் போட்டிகளும் நடத்தப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
13-அக்-201905:51:36 IST Report Abuse
blocked user குப்பைகளை ஒரு இடத்தில் இருந்து சேகரித்து வேறு இடத்துக்கு கொண்டு சென்று மக்கவைப்பது, அதை உரமாக பயன்படுத்துவது இன்னும் சிறப்பை கொண்டுவரும். பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்வது நீண்ட கால அடிப்படையில் நன்மையை கொண்டுவரும்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
12-அக்-201922:15:53 IST Report Abuse
vnatarajan plogging லே நான் சேர ஆசைப்படுகிறேன். அந்த க்ரூப்பை எப்படி காண்டாக்ட் செய்யலாம். தினமலர் அந்த க்ரூப்பிங் போன் நம்பரை வெளியிட்டால் பலபேர் சேரக்கூடும். இதனால் தூய்மை இந்தியாவிற்கு ஆதரவும் அதிகமாகும்.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
12-அக்-201921:13:13 IST Report Abuse
Rajas பிளாஸ்டிக் ஒழிந்தாலே 90 % குப்பை ஒழிந்து விடும். முன்பெல்லாம் சென்னையில் ஒவ்வொரு வீட்டின் முன்பும் குப்பை தொட்டி இருக்கும். அதில் (பிளாஸ்டிக் இல்லாத உலகம் அது) வீட்டில் மீந்த உணவு பொருட்களை எல்லாம் போடுவார்கள். காகம், நாய், பூனை, மாடு என்று ஜீவராசிகள் அதை காலி செய்யும். மிச்சம் இருப்பதை எறும்புகள் காலி செய்யும். மறுநாள் குப்பை வண்டிக்கு (மாட்டு வண்டி) அதிகம் வேலை இருக்காது. இப்போது குப்பை தொட்டி இருந்த இடத்தில எல்லாம் தெருவில் வண்டிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X