பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய - சீன உறவில் புது அத்தியாயம்: மோடி

Updated : அக் 12, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (14)
Advertisement
இந்தியா, சீனா, ஜின்பிங், மோடி, பிரதமர், சீன அதிபர், தமிழகம், மாமல்லபுரம்

மாமல்லபுரம்: பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங் தனித்தனியாக சந்தித்து பேசியதை தொடர்ந்து, இருவர் தலைமையில் இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம் கோவளம் தாஜ்பிஷர்மேன் கோவ் ஓட்டலில், நடந்த உயர்மட்ட ஆலோசனையில், இந்திய தரப்பில், பிரதமர் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சீன தரப்பில், அதிபர் ஜின்பிங் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, யாங் சியாச்சி, ஹூ லியாங், , இந்தியாவிற்கான சீன தூதர் சன் வியாங்டங் உள்ளிட்டோ் கலந்து கொண்டனர்.





சந்திப்பின் போது, பிரதமர் மோடி பேசும் போது, மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் என தமிழில் பேச்சை துவக்கினார். தொடர்ந்து,உலகின் பழமையான மொழியான தமிழில் நான் பேசுகிறேன் என ஹிந்தியில் கூறிய மோடி தொடர்ந்து பேசியதாவது:
சீன அதிபரை தமிழநாட்டிற்கு நான் மனதார வரவேற்கிறேன். இரு நாட்டு உறவும் பழமைக்கு திரும்பும். இரு நாட்டு உறவும் எப்போதும் போல் நிலைத்த தன்மையடன் வளர்ந்து வருகிறது. 2000 ஆண்டுகளாக தமிழகம், சீனா இடையே வர்த்தக கலாசார உறவு இருந்து வருகிறது. இந்த சந்திப்பு புதிய அத்தயாயத்தை ஏற்படுத்தும். சென்னை சந்திப்பிற்கு பிறகு, இந்தியா சீனா உறவில், ஒத்துழைப்பிற்கான புதிய சகாப்தம் துவங்கும். கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக உலகளவில் பொருளாதார சக்தியாக இரு நாடுகளும் திகழ்ந்தன. வூஹான் சந்திப்பு, நமது உறவில் புதிய அத்யாயம் மற்றும் நம்பிக்கையை கொடுத்தது. பிராந்திய தொடர்பும் அதிகரித்தது. நமக்கு இடையே உள்ள வேறுபாட்டை, பிரச்னையாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். இரு நாடுகளின் பிரச்னைகளில், ஒவ்வொரு நாடும் கவனமாக இருக்க வேண்டும். நாம் முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். எனக்கூறினார்.




சீன அதிபர் ஜின்பிங் பேசும்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியும் ,நானும், நண்பர்கள் போல் நேற்று (அக்., 11) ஆலோசனை நடத்தினோம். மோடியுடன் இதயப்பூர்வமான ஆலோசனை நடத்தியுள்ளேன். உங்களின் வரவேற்பில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதனை நானும் எனது நண்பர்களும் வலிமையாக உணர்ந்தோம். இதனை எங்களால் மறக்க முடியாது. இந்த அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு வரும் காலங்களிலும் தொடரும். மாமல்லபுரத்தை எங்களால் மறக்க முடியாது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-அக்-201919:59:09 IST Report Abuse
Pugazh V தசரா பண்டிகை தள்ளுபடி அறிவிப்பு களால் ஆன்லைன் வர்த்தகம் மூலம் சீன கம்பெனி களில் ஒன்றான ஒன் ப்ளஸ்போன் தயாரிக்கும் ஓப்போ நிறுவனம் மட்டுமே ரூ.522 கோடி க்கு இந்தியா வில் விற்பனை செய்து விட்டது. இது சீனாவுக்கு சிம்ம சொப்பனமா?
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
13-அக்-201903:13:16 IST Report Abuse
Sathya Dhara நீங்கள் எழுதிய ..."ரூ.522 கோடி க்கு இந்தியா வில் விற்பனை செய்து விட்டது"......கான் கிராஸ் கும்பலின் அறுபது ஆண்டு அலங்கோல ஆட்சியின் .."நீட்சி ".....பல காலம் புரையோடி இருக்கும் கடுமையான வியாதிகளை குணப்படுத்த சில ஆண்டுகள் ஆகும்....
Rate this:
Share this comment
Cancel
விமர்சகன் - kovai,இந்தியா
12-அக்-201918:44:03 IST Report Abuse
விமர்சகன் தமிழ் தமிழர்கள் என பேசுவது மறுபுறம் கீழடி ஆய்வை முடக்குவது, வடமாநிலத்தவர்களை இங்கு வேலைக்கு அமர்த்துவது , அணுக்கழிவுகளை இங்கு கொட்ட நினைப்பது,மீத்தேன்,ஹைட்ரோகார்பன் இன்னும் நிறைய செய்கிறீர்கள்.தமிழ்நாட்டிற்கு நல்லது ஏதாவது செய்தால் (கோதாவரி இணைப்பு ) திராவிட கழிசடைகளை ஒதுக்கி விட்டு உங்களுக்கு வாக்களிப்பர். இல்லையென்றால் நோட்டாவுடன் போட்டி போட வேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel
BALU - HOSUR,இந்தியா
12-அக்-201917:40:23 IST Report Abuse
BALU டமிளன்ங்கிற போதையைத் தவிர வேறேதும் தெரியாத அடிமைத்தனத்தில் ஊறிப்போன அடிவருடி அடிமைகளெல்லாம் இங்கு கருத்தை துப்பிவிட்டு செல்கின்றனர். ஆனால்ஒன்று இந்த டமிளன்கிற முகமூடிக்குள் மறைந்திருக்கும் அடிப்படை மதவாத பிரிவினைவாதிகளை வேரறுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X