பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் பற்றி ஜின்பிங் பேசவில்லை

Updated : அக் 12, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி : மோடி - ஜின்பிங் ஆலோசனையின் போது காஜ்மீர் விவகாரம் பற்றி பேசப்படவில்லை என மத்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் ஆலோசனையின் போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது பேசிய அவர், இரு நாட்டு தலைவர்கள் இடையே இன்று 90

புதுடில்லி : மோடி - ஜின்பிங் ஆலோசனையின் போது காஜ்மீர் விவகாரம் பற்றி பேசப்படவில்லை என மத்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.latest tamil news
பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் ஆலோசனையின் போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது பேசிய அவர், இரு நாட்டு தலைவர்கள் இடையே இன்று 90 நிமிடங்கள் ஆலோசனை நடந்தது. தொடர்ந்து பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் மோடி, ஜின்பிங்கிற்கு விருந்தளித்தார். மொத்தமாக இரு நாட்டு தலைவர்களும் 6 மணி நேரம் பேசினர். வர்த்தகம், முதலீடு, சேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, இது குறித்து பேச நிதியமைச்சர்கள் அளவிலான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.


latest tamil news
இரு நாட்டு மக்களிடையேயான உறவில் புதிய கவனம் செலுத்தப்பட உள்ளது. இது பற்றி யோசனைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. காஷ்மீர் விவகாரம் குறித்து எந்த பேச்சும் நடத்தப்படவில்லை. எந்த குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பு குறித்தும் பேசப்படவில்லை. பொதுவான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தே ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களின் நமது நிலைப்பாடு குறித்து தெளிவான தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகள் இடையே ராஜாங்க ரீதியிலான உறவை மேம்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. சீனா வர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு மோடியும் ஒப்புதல் தெரிவித்துள்ளார். மோடி சீனா செல்லும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். சிறப்பான வரவேற்பு அளித்த தமிழக மக்களுக்கு ஜின்பிங் நன்றி தெரிவித்தார். மானசரோவருக்கு யாத்திரை செல்லும் வசதி செய்யப்பட ஜின்பிங் கோரினார். சீனா - தமிழகம் இடையேயான உறவை அதிகரிக்கவும் மோடி பல கருத்துக்களை கூறினார்.


latest tamil news


சீனாவில் உள்ள சிவன் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்ரான் கானின் சீன பயணம் குறித்தும் ஜின்பிங், மோடியிடம் தெரிவித்தார். இருநாட்டு உறவில் சில பிரச்னைகள் உள்ளன.அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணவே இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு நடந்தது. சென்னையில் சீன தூதரகம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தினமலர் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கோகலே, உலக பாரம்பரிய தலம் என்பதாலேயே இருநாட்டு தலைவர்களும் சந்திக்க மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது. சென்னையில் சந்திப்பு நடைபெற வேண்டும் என்பதில் மோடி உறுதியாக இருந்தார். மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் மோடியே. இந்த சந்திப்பை வேறு எங்கும் நடத்துவது குறித்து மத்திய அரசு யோசிக்கவில்லை என்றார்.
இந்த சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடை தமிழக அரசு செய்தது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
13-அக்-201912:05:37 IST Report Abuse
RM பேசமாட்டார்.இம்ரானோட பேசிட்டார்.பாக்கிஸ்தானின் ரயில்வே, உள்கட்டமைப்பு, என பல project கள் சீனாவிடம். மிக நெருங்கிய உறவு.இந்திய அரசாங்கம் மிக"கவனமாக இருக்க"வேண்டும் சீனரிடம்.தென்கிழக்காசிய கடல்ஆதிக்கம்"தன் கையிலிருக்க விரும்புகிறது.மகாபலிபுரம்,அந்தநாட்டு அமைச்சர் தேர்ந்தெடுத்த இடம்.கலைக்கண்ணோடா வருவார்கள்.இலங்கைதுறைமூக கட்டமைப்பு அவர்கள் கையில்.தொலைநோக்கு சிந்தனையின்றி, தென்கடல்எல்லை பற்றி நினைக்காமல், மாமல்ல பூரம் தேர்ந்தெடுப்பார்களா?நம்ம கடலோர பாதுகாப்பு இந்த விசிட் வைத்து சீன உளவுத்துறை அறிந்திருக்கும்.டில்லியில் கூப்பிட்டோமா, விருந்த குடுத்தோமா, பேசினோமா என முடித்திருக்கலாம்
Rate this:
Cancel
12-அக்-201922:05:38 IST Report Abuse
ஆப்பு பேசியிருந்தாலும் ராஜதந்திரம். பேசலைன்னாலும் ராஜ தந்திரம். என்ன பேசுனாங்கன்னு அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். நாம டீ.வி ய ஆன் பண்ணினோமா, மயிலாட்டம், ஒயிலாட்டம்னு அவிங்க காட்டுனதை பாத்தோமான்னு போகணும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-அக்-201921:41:02 IST Report Abuse
தமிழவேல் வந்ததே அதுக்குத்தானே...
Rate this:
Balaji - Chennai,இந்தியா
12-அக்-201922:32:54 IST Report Abuse
Balajiநீ கேட்ட அவுங்க பேசுனதை?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X