பிரியங்காவின் பாசம்

Updated : அக் 12, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (26)
Advertisement

புதுடில்லி : பிரியங்காவை பார்க்கும் பொதுமக்கள், அவருடைய பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திராவைப் போலவே இருக்கிறார் என்கின்றனர். உருவ ஒற்றுமையில் மட்டுமல்லாமல், இந்திராவின் சில குணநலன்களும், பிரியங்காவிடம் ஒட்டியிருப்பதாக அவர்கள் சொல்கின்றனர். விலங்குகள் மீது அன்பாக இருந்தவர் இந்திரா. அதேபோல, பிரியங்காவுக்கும், விலங்குகள் மீது தனிப் பாசம் உண்டு.






சமீபத்தில், டில்லி மிருக காட்சி சாலையில், 59 வயதான சிம்பன்சி குரங்கு இறந்து போனது. இந்த நிகழ்வு, பிரியங்காவை பெரிதும் பாதித்துவிட்டது. 'அழகான, புத்திசாலியான, வயதான என் தோழி இறந்துவிட்டாள்; வருத்தமாக இருக்கிறது' என, இரங்கல் செய்தி வெளியிட்டார் பிரியங்கா.

ரீட்டா என்ற அந்த பெண் சிம்பன்சிக்கும், பிரியங்காவுக்கும் பல காலமாக நட்பு உண்டு. ராஜிவ் பிரதமராயிருந்த போது, அவருக்கு ஒரு சிங்கக் குட்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அந்த குட்டி சிங்கம், சில காலம், ராஜிவ் வீட்டில் வளர்ந்தது. அப்போது பிரியங்கா, அந்த சிங்கத்திடம் விளையாடுவாராம். பிறகு, அந்த குட்டி சிங்கத்தை, ராஜிவ், டில்லி மிருக காட்சி சாலைக்கு கொடுத்துவிட்டார். இந்த சிங்கத்தைப் பார்க்க, பிரியங்கா அடிக்கடி மிருக காட்சி சாலைக்கு வருவார். அப்போது, சிம்பன்சி ரீட்டாவையும் பார்த்து விட்டுப் போவார். இப்படித்தான் சிங்கம் மூலமாக, ரீட்டாவும் பிரியங்காவிற்கு தோழியானார்.




பாட்டி இந்திராவைப் போலவே, பிரியங்காவும் விலங்குகள் மீது நட்போடு இருக்கிறார். ஆனால், இதெல்லாம் தேர்தல் அரசியலுக்கு எப்படி உதவும் என்கின்றனர் விமர்சகர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-அக்-201918:50:41 IST Report Abuse
skv srinivasankrishnaveni மனிதர்களுக்கு பொறாமைக்குணம் உண்டு ஆனால் மிருகங்களுக்கு பொறாமையே கிடையாது வெரி பிரெண்ட்லி நடிப்புடன் பழக்க விரும்புவோர் கட்டாயம் மிருகம் காலை பிரியமுடன் நேசிப்பார்கள் இது உண்மை
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
13-அக்-201914:17:36 IST Report Abuse
Sivagiri ஐயோ கரகாட்டக்காரன் - செந்தில்-கோவை சரளா காமெடி மாதிரி இருக்கு -
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
13-அக்-201911:44:14 IST Report Abuse
RM காந்திகுடும்பத்தை சேர்ந்த மேனகா, வருண் பி.ஜே.பி தான? வருண்காந்தினுதானே கட்சில கூப்பிடறாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X