பிரதமரின் தம்பி மகளிடம் மொபைல், ரொக்கம் பறிப்பு

Updated : அக் 13, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி:பிரதமர் மோடியின் தம்பி மகளிடம், 56 ஆயிரம் ரொக்கம், மொபைல் போன்கள் வைத்திருந்த பர்சை பறித்துச் சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.பிரதமர் மோடியின் தம்பி, பிரகலாத் மோடி, குஜராத்தில் வசிக்கிறார். இவரது மகள் தமயந்தி, டில்லியில், குஜராத் சமாஜ் பவனில் தங்குவதற்கு, ஒரு அறையை முன் பதிவு செய்திருந்தார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசிலிருந்து, டில்லிக்கு நேற்று காலை
மோடி, உறவினர், பணம், பறிப்பு, டில்லி, மொபைல் போன்கள்

புதுடில்லி:பிரதமர் மோடியின் தம்பி மகளிடம், 56 ஆயிரம் ரொக்கம், மொபைல் போன்கள் வைத்திருந்த பர்சை பறித்துச் சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் தம்பி, பிரகலாத் மோடி, குஜராத்தில் வசிக்கிறார். இவரது மகள் தமயந்தி, டில்லியில், குஜராத் சமாஜ் பவனில் தங்குவதற்கு, ஒரு அறையை முன் பதிவு செய்திருந்தார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசிலிருந்து, டில்லிக்கு நேற்று காலை வந்த தமயந்தி, குஜராத் சமாஜ் பவனுக்கு ஆட்டோவில் சென்றார். குஜராத் பவனை ஆட்டோ நெருங்கிய போது, மோட்டார் சைக்கிளில் இருவர் வந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில், தமயந்தியிடமிருந்து பர்சை பறித்துக் கொண்டு, அவர்கள் தப்பிச் சென்றனர். இதனால், தமயந்தி அதிர்ச்சியடைந்தார். அந்தப் பர்சில், 56 ஆயிரம் ரொக்கம், கிரெடிட், டெபிட் கார்டுகள், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் வைத்திருந்தார். இது பற்றி, தமயந்தி, போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.

இது பற்றி தமயந்தி கூறுகையில், ''அந்தப் பர்சில் தான், நான் திரும்பி செல்வதற்கான டிக்கெட் உட்பட அனைத்தும் வைத்திருந்தேன். இப்போது, என்னிடம் எந்த ஆவணமும் இல்லை. என்ன செய்வது என தெரியவில்லை,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-அக்-201914:28:58 IST Report Abuse
ஜப்பான்நாட்டு துணைமுதல்வர்   சொடலை என்னமா உங்க பெரியப்பா படிச்சு படிச்சு சொல்லுறாரு cash-less எக்கனாமி , இப்படி கேர்லெஸ்ஸா அவர் பேச்சை கேட்காம இருந்தா ரொக்கம் திருட்டு போயிருக்காதுல்ல? பெரியவங்க பேச்சை கேளுங்கம்மா, இங்க உள்ள டுமீளன் மாதிரியே behave பண்ணாதம்மா
Rate this:
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
13-அக்-201907:59:30 IST Report Abuse
தாண்டவக்கோன் யம்ம்......ம்மா
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
13-அக்-201906:45:30 IST Report Abuse
blocked user நல்ல வேளை கருணா உயிருடன் இல்லை. இருந்திருந்தால் மோடி கள்ளத்தனமாக சம்பாதித்ததில் தம்பி பெண்ணுக்கு இரண்டு மொபைல் போன் வாங்கிக்கொடுத்து இருக்கிறார் என்று கதை கட்டி விட்டு இருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X