அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஸ்டாலின் முதல்வராவதற்கு முன் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதா?'

Updated : அக் 14, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (58)
Advertisement
ஸ்டாலின், உதயநிதி, முன்னிலை, ஆலோசனை குழு

சென்னை : தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, தனியாக, அரசியல் ஆலோசனை குழு அமைக்கும், குடும்பத்தினரின் முயற்சிக்கு, சிலர் முட்டுக்கட்டை போட்டு விட்டதாக தெரிகிறது.

லோக்சபா தேர்தலில், நட்சத்திரப் பேச்சாளர் என்ற அந்தஸ்துடன், நடிகர் உதயநிதி பிரசாரம் செய்தார். தேர்தலில், தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி, உதயநிதிக்கு சாதகமாக மாறியது. அவருக்கு, இளைஞரணி செயலர் பதவி தேடி வந்தது. உதயநிதி பதவி ஏற்றதும், சில மாவட்டங்களில், சுற்றுப்பயணம் செய்தார்.


கோஷ்டி சண்டை

அப்போது, மூத்த மாவட்ட செயலர்களின் ஆதரவாளர்களுக்கும், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும் இடையே உட்கட்சி பூசல் தலை துாக்கியது. குறிப்பாக, இளைஞர் அணியினர் சார்பில், 'மூன்றாம் கலைஞரே, இளைய தளபதியே, தி.மு.க.,வின் எதிர்காலமே' என, விளம்பரப்படுத்தியதை, சீனியர் நிர்வாகிகள் விரும்பவில்லை; ஸ்டாலின் ஆதரவாளர்கள் ரசித்தனர். இதனால், மாவட்டங்களில், கோஷ்டி சண்டை ஏற்பட்டது. எனவே, சில மாவட்டங்களில், சுற்றுப் பயணம் செல்வதை, உதயநிதி தவிர்த்தார்.

வழக்கமாக, உதயநிதி பங்கேகும் நிகழ்ச்சியில், ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பு எழுதி வைத்து பேசி வருகிறார். ஒரு கூட்டத்தில், திராவிட இயக்கம், நீதி கட்சி பற்றி பேசுகையில், தவறாக சில கருத்துகளை, உதயநிதி தெரிவித்தது சர்ச்சைக்கு உள்ளானது; சமூக வலைதளங்களில், 'மீம்ஸ்'கள் வெளியானது. இதுவும், கட்சியில் உள்ள சீனியர்களை முகம் சுளிக்க வைத்தது.


அரசியல் ஆலோசனை

அதனால், சர்ச்சையை தவிர்க்கும் வகையில், உதயநிதிக்காக, தனி அரசியல் ஆலோசனை குழு உருவாக்க வேண்டும் என, ஸ்டாலின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இது, ஸ்டாலினுக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கி வரும், ஓ.எம்.ஜி., குழுவினரை அதிருப்தி அடையச் செய்தது. 'ஸ்டாலின், இன்னும் முதல்வராகவில்லை. அவர் முதல்வராகிய பின், உதயநிதியை முன்னிலைப்படுத்தினால், எந்த பிரச்னையும், குழப்பமும் வராது.

ஸ்டாலின் முதல்வராகுவதற்கு முன், உதயநிதியை தனி அடையாளப்படுத்துவது, ஆளுங்கட்சிக்கும், நடிகர் ரஜினிக்கும் சாதகமாக மாறி விடும்' என, அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். எனவே, உதயநிதிக்கு, தனியாக அரசியல் ஆலோசனை குழு அமைக்கும் முயற்சியில் முட்டுக்கட்டை விழுந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-அக்-201910:51:02 IST Report Abuse
Malick Raja திமுக கட்சிக்காரர்கள் சம்மதிப்பதால்தான் உதயநிதி பதவிக்கு வரமுடிகிறது மக்கள் சம்மதித்தால் ஆட்சிக்கு வரமுடியும் .. இதற்கிடையில் கருத்துக்களை வசையாக கூறி அறிவிலிகள் தங்களை வெளிப்படுத்துவதும் அறியாமையாகத்தானே இருக்கமுடியும் .
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-அக்-201912:07:05 IST Report Abuse
skv srinivasankrishnaveni இது திமுக என்றால் என்ன அருத்தம் திருக்குவளைமுத்துவேலர்கருணாநிதியின் வார்சு சுடாலினமாடும் தான் அடுத்து அவன் பிள்ளை உதைக்கும் நிதி பிறகு அவன்பிள்ளை நிதி இப்படியேதான் சோழர்குலம் வாழவேண்டும் என்பதுதான் முகவின் நீதி தெரியாதா , என்னிக்கு காமராசரை துரத்திட்டு இந்த கழகம்களை கொண்டாந்து நிறுத்தினானோ தமிழன், அன்றே செத்துப்போச்சுய்யா தமிழ்நாடுன்னுபெயரைமாத்திண்டு அம்பத்திரெண்டுவருஷம் போயிட்டுதே எம் ஜீ ஆர் பிச்சுண்டுவந்தாரு நீதிநேர்மை என்று சொல்லி அதிமுகவை ஆரம்பிக்க ஜெயாவை முன்னிறுத்தி அதிமுகா லே அடிச்சுகொள்ளைகள் பல்லாயிரம் கோடிகள் , ஆர்வி போன்ற வர்களால் கிடைச்சுது நெய்வேலி அண்ட் சேலம் இரும்பாலை இப்போது அதுலேயும் நோ யூஸ்
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
14-அக்-201913:27:04 IST Report Abuse
narayanan iyer திமுகவின் பெரிய கஷ்டமே தொடர்ந்து காட்சிப்பணி செய்தவர்களுக்கு கடுக்காயைத்தான் கொடுப்பார்கள் .பாருங்களேன் நேற்று சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்கி விட்டார்கள் . பன்னெடுங்காலம் இருந்தவர்கள் இன்னும் தேனை பார்க்க மட்டுமே அனுமதி . இன்னொன்று இதுதான் சரியான தருணம் உதயநிதியை கொண்டுவர . காரணம் ஸ்டாலினுக்கு வயது ஆகிவிட்டது கருணாநிதிமாதிரி கடைசிவரை காத்திருக்காமல், இப்பவே கட்சிக்காரர்களை தயாநிதியின் தலைமைக்கு கட்டுப்படவைத்துவிட்டதால் நல்லது . அதைத்தான் சிந்தனை சிற்பி செய்து வருகிறார் . வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X