பொது செய்தி

தமிழ்நாடு

உற்சாகமாக குப்பைகளை அகற்றிய மோடி

Updated : அக் 14, 2019 | Added : அக் 12, 2019 | கருத்துகள் (57+ 287)
Advertisement
மோடி, தூய்மை, உற்சாகம், கு்பபை, அகற்றம், மாமல்லபுரம், கடற்கரை

சென்னை : சீன அதிபருடன் சந்திப்பு, அழியாத கலை சிற்பங்களை பார்த்து ரசிப்பு, கலை நிகழ்ச்சிகள், நிலவொளியில் இரவு விருந்து என, நேற்று முன்தினம், மாமல்லபுரத்தையே மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய, பிரதமர் மோடி, நேற்று அதிகாலையும், அதே உற்சாகத்துடன், மாமல்லபுரம் அருகே உள்ள கோவளம் கடற்கரை மணலில், தனியாக, மிக எளிமையாக நடைபயிற்சி மேற்கொண்டார். அத்துடன், கடலோர மணற்பரப்பில் கிடந்த குப்பையை, தன் கைகளால் அகற்றி, துாய்மையின் அவசியத்தையும், மக்களுக்கு உணர்த்தினார்.

இந்தியா - சீனா இடையிலான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு, நேற்று முன்தினம், மாமல்லபுரத்தில் துவங்கியது. இதில் பங்கேற்க வந்த, சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, பிரதமர் மோடி வரவேற்றார். இருவரும், மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டனர்.


விருந்து உபசரிப்பு

புராதன சின்னங்களின் சிறப்புகளை, சீன அதிபர் ஜின்பிங்குக்கு, பிரதமர் மோடி எடுத்துரைத்ததுடன், இந்திய மற்றும் தமிழக கலாசார பின்னணி மற்றும் வரலாற்றையும் தெரிவித்தார். கடற்கரை கோவில் அருகே, இருவரும் தனியே அமர்ந்து பேசினர். இரண்டரை மணி நேர பேச்சும், விருந்து உபசரிப்பும் நடந்தது. அப்போது, இரு தரப்பு வர்த்தக உறவுகள், பொருளாதார மேம்பாடு, மத பயங்கரவாதம் ஒழித்தல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்தனர்.

இரவு, 10:30 மணிக்கு, முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிந்தன. சீன அதிபர் ஸீ ஜின்பிங், சென்னை, கிண்டியில் உள்ள, நட்சத்திர ஓட்டலில் தங்கினார். கோவளத்தில் உள்ள, 'பிஷர்மேன் கோவ்' நட்சத்திர ஓட்டலில், மோடி தங்கினார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு எழுந்தார். ஓட்டலின் பின்புறம் உள்ள, கடற்கரை மணலில், நடைபயிற்சி மேற்கொண்டார்.

கறுப்பு நிற, 'டி - -ஷர்ட்' மற்றும் கறுப்பு நிற பேன்ட் அணிந்து, வெறுங்காலுடன், கடற்கரை மணலில் நீண்ட துாரம் நடந்தார். கடற்கரை பகுதியில் இருந்த பாறையில் அமர்ந்து, தியானம் செய்தார். சூரிய உதயத்தை ஒட்டிய கதிர்வீச்சையும், சூரிய கதிர்களில் மிளிர்ந்த அலைகளையும் ரசித்து பார்த்தார். 'அக்குபிரஷர்' உபகரணத்தை வைத்து, உள்ளங்கைக்கும், விரல்களுக்கும் தேவையான, 'மசாஜ்' பயிற்சி செய்தார். பின், கடற்கரை மணலில் நடையை தொடர்ந்த மோடியின் கண்களில், மணலில் கிடந்த குப்பை கழிவுகள் பட்டதும், ஒவ்வொன்றாக தேடித் தேடி, வெறுங்கைகளால் எடுக்கத் துவங்கினார்.


அள்ளிப் போட்டார்

ஆங்காங்கே கிடந்த, காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பையை, ஒவ்வொன்றாக எடுத்து, ஒரு பையில் அள்ளிப் போட்டு, அவரே துாக்கி சென்று, ஓட்டல் ஊழியர் ஜெயராஜிடம் வழங்கினார். பிரதமர் மோடி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், குப்பையை அகற்றிய, 'வீடியோ' காட்சியை பதிவிட்டார். அதில், 'நம்மை சுற்றிஉள்ள பொது இடங்கள் துாய்மையாகவும், நேர்த்தியாகவும் இருப்பதை உறுதி செய்வோம். நாம் அனைவரும் உடல் உறுதியுடனும், ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்வோம்' என, குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரை மணலில், குப்பையை அகற்றியதன் வாயிலாக, கடற்கரை மற்றும் பொது இடங்களை துாய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.


வியக்க வைத்தது

பிரதமர் மோடியின் செயல், சீன பிரதிநிதிகள் குழுவினரையும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளையும், வியக்க வைதது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு, துாய்மையை பேணுதல் ஆகிய கருத்துகளையும், துாய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவத்தையும், பிரதமர் மோடி தன் செயலால், நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளார் என, சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (57+ 287)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
13-அக்-201921:25:14 IST Report Abuse
Sundararaman Iyer நாய் வாலை நிமிர்த்தி வைக்க ஆனமட்டும் பாடுபட்டான்..............தமிழனுக்கு என்றைக்கு தான் புத்தி வருமோ தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-அக்-201920:06:46 IST Report Abuse
Pugazh V தெரிந்ததெல்லாம் : சிலை திருட்டு, சிலை கடத்தல், வங்கிகளை ஏமாற்றி கடன் வாங்கி கொண்டு நாட்டை விட்டு ஓடுவது, விமான சர்வீஸ் நடத்த தெரியாமல் நடத்தி திவாலாயிடுத்து என்று வங்கிகள் கடனுக்கு பட்டைநாமம் போடுவது, இதெல்லாம் தான் தெரியும். மேலும் இதுமாதிரி கிரிமினல்களை திகாரில் போடாமல் பார்த்துக் கொள்ளவும் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
periasamy - Doha,கத்தார்
13-அக்-201919:58:20 IST Report Abuse
periasamy இதுவும் வழக்கமான நாடகம் மட்டுமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X