அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஸ்டாலின் முதல்வராகும் முன் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதா?'

Added : அக் 13, 2019
Advertisement

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, தனியாக, அரசியல் ஆலோசனை குழு அமைக்கும், குடும்பத்தினரின் முயற்சிக்கு, சிலர் முட்டுக்கட்டை போட்டு விட்டதாக தெரிகிறது.

லோக்சபா தேர்தலில், நட்சத்திரப் பேச்சாளர் என்ற அந்தஸ்துடன், நடிகர் உதயநிதி பிரசாரம் செய்தார். தேர்தலில், தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி, உதயநிதிக்கு சாதகமாக மாறியது. அவருக்கு, இளைஞரணி செயலர் பதவி தேடி வந்தது. உதயநிதி பதவி ஏற்றதும், சில மாவட்டங்களில், சுற்றுப்பயணம் செய்தார்.

கோஷ்டி சண்டை

அப்போது, மூத்த மாவட்ட செயலர்களின் ஆதரவாளர்களுக்கும், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும் இடையே உட்கட்சி பூசல் தலை துாக்கியது. குறிப்பாக, இளைஞர் அணியினர் சார்பில், 'மூன்றாம் கலைஞரே, இளைய தளபதியே, தி.மு.க.,வின் எதிர்காலமே' என, விளம்பரப்படுத்தியதை, சீனியர் நிர்வாகிகள் விரும்பவில்லை; ஸ்டாலின் ஆதரவாளர்கள் ரசித்தனர்.இதனால், மாவட்டங்களில், கோஷ்டி சண்டை ஏற்பட்டது. எனவே, சில மாவட்டங்களில், சுற்றுப் பயணம் செல்வதை, உதயநிதி தவிர்த்தார். வழக்கமாக, உதயநிதி பங்கேகும் நிகழ்ச்சியில், ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பு எழுதி வைத்து பேசி வருகிறார்.ஒரு கூட்டத்தில், திராவிட இயக்கம், நீதி கட்சி பற்றி பேசுகையில், தவறாக சில கருத்துகளை, உதயநிதி தெரிவித்தது சர்ச்சைக்கு உள்ளானது; சமூக வலைதளங்களில், 'மீம்ஸ்'கள் வெளியானது. இதுவும், கட்சியில் உள்ள சீனியர்களை முகம் சுளிக்க வைத்தது.

அரசியல் ஆலோசனை

அதனால், சர்ச்சையை தவிர்க்கும் வகையில், உதயநிதிக்காக, தனி அரசியல் ஆலோசனை குழு உருவாக்க வேண்டும் என, ஸ்டாலின் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.இது, ஸ்டாலினுக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கி வரும், ஓ.எம்.ஜி., குழுவினரை அதிருப்தி அடையச் செய்தது. 'ஸ்டாலின், இன்னும் முதல்வராகவில்லை. அவர் முதல்வராகிய பின், உதயநிதியை முன்னிலைப்படுத்தினால், எந்த பிரச்னையும், குழப்பமும் வராது.ஸ்டாலின் முதல்வராகுவதற்கு முன், உதயநிதியை தனி அடையாளப்படுத்துவது, ஆளுங்கட்சிக்கும், நடிகர் ரஜினிக்கும் சாதகமாக மாறி விடும்' என, அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். எனவே, உதயநிதிக்கு, தனியாக அரசியல் ஆலோசனை குழு அமைக்கும் முயற்சியில் முட்டுக்கட்டை விழுந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X