பொது செய்தி

இந்தியா

'டல்' அடிக்கும் மாநில தேர்தல்கள்

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (10)
Advertisement

புதுடில்லி: வரும், 21ம் தேதி, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.






தேர்தல் முடிவுகள், 24ல் வெளியாகும். ஹரியானாவில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது; மஹாராஷ்டிராவில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்திருக்கிறது.ஆனால், டில்லி அரசியல் வட்டாரங்களில், இந்த மாநில தேர்தல்கள் குறித்து எந்த பரபரப்பும் இல்லை. காரணம், காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பரிதாப நிலையில் உள்ளது தான்.

மஹாராஷ்டிராவில், காங்., தலைவர்கள் பலர் ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் ஐக்கியமாகிவிட்டனர். ஹரியானா காங்கிரசிலோ கோஷ்டிப் பூசல் உச்சத்திலிருக்கிறது. முன்னாள் காங்., தலைவர் ஒருவர், கட்சியை ஒழிக்க சபதம் போட்டுள்ளார்.வழக்கமாக, 'டிவி' சேனல்கள், கருத்து கணிப்பு, விவாதங்கள் என, சூட்டைக் கிளப்பும். ஆனால், இந்த முறை அமைதி நிலவுகிறது.





இரண்டு மாநிலங்களிலும், பா.ஜ., தான் வெற்றி பெறப்போகிறது என, எதிர்க்கட்சிகளும் முடிவு செய்துவிட்டது போல தெரிகிறது. காங்., முன்னாள் தலைவர் ராகுல், இந்த இரு மாநிலங்களிலும் பிரசாரம் செய்ய முடிவெடுத்திருந்தாலும், அது எடுபடுமா என்பது சந்தேகம் தான். காங்., தலைவர் சோனியாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்யவில்லை.

ஆனால், இப்போது, காங்கிரஸ் பரிதாப நிலையில் இருப்பதால், வேறு வழியில்லாமல், ஓரிரு பிரசார கூட்டங்களில் பேச முடிவு செய்துள்ளார். 'பொருளாதார மந்த நிலை, வேலை வாய்ப்புகள் குறைவு' என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பா.ஜ., ஆட்சியை விமர்சித்து வந்தாலும், தேர்தலில் இது எதிரொலிக்குமா என்பது சந்தேகம் தான்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
13-அக்-201909:07:57 IST Report Abuse
PANDA PANDI முடிவு செய்துவிட்டது போல தெரிகிறது.... நாசமா போவது என்று முடிவு எடுத்துவிட்டால் பின்னர் யார்ஜெயித்தாலென்ன தலைவா. கூட்டி கழிச்சி பாரும் கணக்கு தப்பாவே தான் வரும்.
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
13-அக்-201907:49:32 IST Report Abuse
svs ₹2000 பண மதிப்பிழப்பு எல்லாம் கிடையாது ...ரிசெர்வ் வங்கியில் திருப்பி எடுத்துக்கொள்வார்கள் .....முன்பு பண மதிப்பிழப்பு அறிவித்தபோது அப்போதைய தேவைக்காக ₹2000 கொண்டு வந்தார்கள் ......வங்கியில் ₹2000 கட்டும் போது அது ரிசெர்வ் வங்கி அனுப்பி விடுவார்கள் ......அது மீண்டும் திரும்ப வராது .... அது போல் நடக்கதான் வாய்ப்புள்ளது ....
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
13-அக்-201907:43:40 IST Report Abuse
தமிழ் மைந்தன் ராகுல் பிரச்சாரம் செய்தால் மட்டுமே பாஜகவின் வெற்றி உறுதியாகும்........ அவர் பிரச்சாரத்தில் இல்லை என்றால் பாஜகவின் வெற்றி கஷ்டம்.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X