வேட்டி, சட்டையில் அசத்தல்:பிரதமர் மோடிக்கு குவிகிறது பாராட்டு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேட்டி, சட்டையில் அசத்தல்:பிரதமர் மோடிக்கு குவிகிறது பாராட்டு

Added : அக் 13, 2019

சென்னை:சீன அதிபர் உடனான சந்திப்பின்போது, பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான, வேட்டி, சட்டை அணிந்ததற்கு, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் வேலுமணி: தமிழர் பாரம்பரிய உடை அணிந்த, பிரதமர் மோடிக்கு, என் பாராட்டுகள். கடந்த காலங்களில், எந்தவொரு பிரதமரும், தமிழ் பண்பாட்டை இந்த அளவுக்கு அங்கீகரித்தது கிடையாது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மாமல்லபுரத்தில், சீன அதிபருடன் நடந்த சந்திப்பில், பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை, உலகம் அறியட்டும்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: பிரதமர் மோடி, தமிழகத்தில் சீன அதிபருடன், இரண்டு நாட்கள் தங்கியிருந்து, தமிழர்களின் பாரம்பரிய உடையான, வேட்டி, சட்டை அணிந்து வலம் வந்தார். தமிழக உணவை உண்டு, தமிழகத்தின் பெருமைகளையும், தமிழகம் -- சீனா இடையே இருந்த, பண்டைய கால நட்பு குறித்தும் விளக்கி உள்ளார்.இரு நாட்டு உறவையும் பலப்படுத்தி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது, மிகவும் பாராட்டுக்குரியது. அதேபோல், காலை நடைபயிற்சியின் போது, கடற்கரையில் உள்ள குப்பையை அகற்றி, துாய்மையான இந்தியா உருவாக்க, அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வரவேற்கத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X