அரசியல் செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தல் செலவுக்கு வரும் பணம்?

Updated : அக் 14, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (13)
Advertisement
இடைத்தேர்தல், பணம், கட்சிகள், மிரட்டல், வியாபாரிகள், புகார்

சென்னை : வியாபாரிகளை மிரட்டி, ஆளுங்கட்சியினரும், தி.மு.க.,வினரும், பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி; திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில், வரும், 21ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அதில், விக்கிரவாண்டியில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையேயும்; நாங்குநேரியில், அ.தி.மு.க., - காங்கிரஸ் இடையிலும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தேர்தல் பிரசார செலவுக்கு பணம் தருமாறு, வியாபாரிகளை மிரட்டி, இரு கட்சியினரும் பணம் வசூலிப்பதாக, புகார் எழுந்துள்ளது.


ரூ.30 ஆயிரம்

இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது: அ.தி.மு.க., - தி.மு.க.,வினர், தங்கள் கட்சி தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, நன்கொடை வசூலிப்பர். சிலர், பணமாக வாங்குவதற்கு பதில், பொதுக்கூட்ட மேடை, கலை நிகழ்ச்சிகள், பிரம்மாண்ட அலங்கார விளக்குகள், சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை, பேனர் போன்ற செலவுகளை ஏற்க சொல்வர். வாரத்திற்கு, ஏதேனும் நிகழ்ச்சியை கூறி, செலவுக்கான பணத்தை வாங்குவர்.

அவர்களை பகைத்தால், தொழிலுக்கு இடையூறு செய்வர். இதனால், அவர்கள் கூறும் செலவுகளில், பாதி வரை ஏற்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, தற்போது, தென்சென்னை, வட சென்னையில் உள்ள வியாபார தளங்களில், ஜவுளி, மளிகை என, அனைத்து கடைகளில், கூட்டம் அலைமோதுகிறது.

இதனால், ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர், கடைகளுக்கு வந்து, 'விக்கிரவாண்டி, நாங்குநேரிக்கு, தேர்தல் பிரசாரத்திற்கு, ஆட்களை அழைத்து செல்ல வேண்டும்; இரண்டு பஸ்கள் ஏற்பாடு செய்து தாருங்கள்; இல்லையெனில், 30 ஆயிரம் ரூபாய் தாருங்கள்' என, கேட்கின்றனர். எங்க ஆட்சி தான் 'அவ்வளவு பணம் இல்லை' என்றால், 'எவ்வளவு வியாபாரம் நடக்கிறது; விரைவில், உள்ளாட்சி தேர்தல் வருகிறது; நான் தான் கவுன்சிலர்; எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்' என, மிரட்டும் விதமாக பேசுகின்றனர்.

இந்த விபரத்தை தெரிந்து, தி.மு.க.,வினரும் வந்து, 'திருவாரூரில், தலைவர் கருணாநிதிக்கு, அருங்காட்சியம் கட்ட உள்ளோம்; 20 ஆயிரம் ரூபாய் தரவும்; அடுத்து, எங்க ஆட்சி தான்' என, மிரட்டுகின்றனர். பணம் தர மறுத்தால், இரு கட்சியினரும் சேர்ந்து, கடையால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், சுகாதாரமற்று இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, பொய் புகார்களை அனுப்புகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-அக்-201900:08:42 IST Report Abuse
Pugazh V தெருபொறுக்கற தராதரத்இலும் தாழ்ந்த நிலையில் எந்த தினமலர் ஊழியர் எனதுஸக்ஷ கருத்தை தணிக்கை என்ற பேரில் தவறான அர்த்தம் வரும் வகையில் பதிவிடும் ஈனச்செயலை செய்கிறார் என்று தெரியவில்லை.அந்த ஆள் அல்லது ஆட்கள் நல்ல குடும்ப த்தில் பிறந்தவராக இருக்கும் வாய்ப்பே இல்லை. கையில் ஊடகம் இருபாபதால் பரத்தையர் தொழில் செய்யும் உன ஜென்ம ங்களை வன்மையாக கண்டிக்கிறேன். இதவா நான் எழுதியது://Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா 13-அக்-2019 19:18 திராவிட கூலிப்படைகள்// உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். இதுக்கு பதிலாக முழுக் கருத்தை யும் தணிக்கை செய்திருக்கலாம். எந்த திராவிட விரோத ஆரிய மிருகம் இதைச் செய்து கேவலமான சுகம் பெறுவதாக நினைக்கிறதோ÷ பரிதாபம்
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-அக்-201920:35:54 IST Report Abuse
மலரின் மகள்கள் கராச்சி
Rate this:
Share this comment
Cancel
kurinjikilan - Madurai,இந்தியா
13-அக்-201919:52:50 IST Report Abuse
kurinjikilan வியாபாரி கோடிகோடியாக வசூல் செய்து உபகாரமாக அவரது கடைகளில் சாமான்கள் வாங்க டோக்கன் கொடுத்து ஓட்டை வாங்குவார்..சென்ற இரு தேர்தல்களில் இதுதான் நடந்தது.. காசுக்கு காசும்ஆச்சு..விக்காத பொருளை வித்தமாதிரியும் ஆச்சு..பலே கில்லாடி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X