சென்னை : சென்னை, கோவளத்தில் நடந்த, இரண்டாவது உச்ச மாநாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து, மூன்றாம் மாநாட்டில் பங்கேற்க, சீனாவுக்கு வரும்படி, பிரதமர் மோடிக்கு, சீன அதிபர் ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா - சீனா இடையிலான, இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு, இரண்டு நாள் நடந்தது. உலக நாடுகளின் பார்வையை ஈர்த்த, இந்த மாநாட்டின் நிகழ்வுகளும், முடிவுகளும், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.இந்த மாநாடு, எதிர்பார்த்ததை விட பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ளதாலும், நம் வரவேற்பில் மனம் நெகிழ்ந்ததாலும், சீன அதிபர் ஜின்பிங், 'வரும் காலங்களில், இதுபோன்ற மாநாடுகளை தொடர்ந்து நடத்தலாம்' என, ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக, மூன்றாவது முறைசாரா உச்சி மாநாட்டை நடத்துவதற்கு, சீனா முடிவு செய்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க, சீனா வருமாறு, பிரதமர் மோடிக்கு, சீன அதிபர் ஸீ ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.இந்த அழைப்பை, பிரதமரும் ஏற்றுள்ளதாக, இந்திய வெளியுறவு துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். இந்த மாநாடு, இரு நாடுகள் இடையில் பரஸ்பர உறவு, நட்பு மற்றும் நம்பிக்கையை பலப்படுத்தி உள்ளதாக, இந்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE