'ஆக்டிவ்' தலைவர் அத்வானி

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (24)
Advertisement

புதுடில்லி: பா.ஜ.,வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானிக்கு, 92 வயதாகிறது. ஆனால், இந்த வயதிலும், டில்லியில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவர் தவறாமல் கலந்து கொள்கிறார். அதிலும், பார்லிமென்ட் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை அவர் தவற விடுவதேயில்லை. பார்லிமென்டில், மூத்த தலைவர்களின் சிலைகள் மற்றும் படங்கள் உள்ளன. இந்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு தினங்களில், மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.






இவற்றில், அஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு மட்டும், சில, 'சீனியர்' தலைவர்கள் கலந்து கொள்வர். ஆனால், அத்வானி, அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்கிறார். வயது மூப்பு காரணமாக, அவருடைய மகள் பிரதீபா, அத்வானியின் கையைப்பிடித்து அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து வருகிறார்.அத்வானி, அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்பில் இருந்த போது, அவருக்கு செயலராக, பல ஆண்டுகளாக பணியாற்றிய தீபக் சோப்ராவும் உடன் இருக்கிறார். இவர்கள் இருவர் இல்லாமல், அத்வானி வெளியே எங்கும் செல்வதேயில்லை.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்த போது, அவருக்கு, 93 வயது. ஆனால், அவர், பல ஆண்டுகளாக வெளியே வராமல், வீட்டில், படுக்கையிலேயே இருந்தார்.





ஆனால், அத்வானி இந்த வயதிலும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார் என, சந்தோஷப்படுகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.சமீபத்திய லோக்சபா தேர்தலில், அத்வானியின் தொகுதியான, குஜராத்தில் உள்ள காந்தி நகரில் போட்டியிட, வயது மூப்பு காரணமாக, அவருக்கு, 'சீட்' தரப்படவில்லை. இந்த தொகுதியில், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த வயதிலும் ஆக்டிவாக இருக்கும் அத்வானியை, பிரதமர் மோடி, கட்சி தலைவர் -அமித் ஷா ஓரங்கட்டிவிட்டனர் என, பா.ஜ.,வில் ஒரு தரப்பு வருத்தப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
L.N.Ramesh - madurai,இந்தியா
19-அக்-201912:50:21 IST Report Abuse
L.N.Ramesh நடப்பவை யாவும் நன்மைக்கே
Rate this:
Share this comment
Cancel
மணி - புதுகை,இந்தியா
17-அக்-201914:14:33 IST Report Abuse
மணி அத்வானி, வாஜ்பாயி அய்யா அரசியலில் இருந்த காலத்தில் நானும் ஒரு பிஜேபி ஆதரவாளன் தான், இன்று இருப்பது ஒரிஜினல் பிஜேபியே அல்ல வெள்ளையரின் கூலிகளால் ஹைஜாக் செய்யப்பட்ட பிஜேபி.
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
16-அக்-201910:12:20 IST Report Abuse
vbs manian நேர்மையான கட்டுப்பாடான வாழ்க்கை .கர்ம யோகி போல் வாழ்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X