சம்பவம் செய்தி

தமிழ்நாடு

20 ஆண்டுக்கு பின் தாயிடம் சேர்ந்த தனயன்: சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (10)
Advertisement
தாய்,  தனயன், சினிமா, உண்மை சம்பவம்

கடலுார்: இருபது ஆண்டுகளுக்கு முன், காணாமல் போன மகனை, தாய் கண்டுபிடித்து, தன்னுடன் அழைத்துச் சென்றார்.

பெரம்பலுார் மாவட்டம், திருவாலந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர், இந்திரா. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். 6 வயதில் மாயம்இந்திராவின் கணவர், பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 20 ஆண்டுகளுக்கு முன், இவரது, 6 வயது மகன் மணிகண்டன், வயலில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது, வழி தவறி சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த இந்திரா, மகளுடன், பெங்களூருக்கு கட்டட வேலைக்கு சென்று விட்டார். சில ஆண்டுகளுக்கு முன், மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.இந்திரா, தற்போது, சொந்த ஊரில் வசித்து வருகிறார். அருகிலுள்ள தொழுதுாருக்கு கட்டட வேலைக்கு சென்றபோது, தன் கணவரின் சாயலில் இருந்த இளைஞரும், உடன் வேலை செய்வதைக் கண்டு, ஆச்சரியமடைந்தார். சிறு வயதில் காணாமல் போன மகனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த இளைஞரிடம் விசாரித்தார். அவர், தான் இம்ரான் எனவும், தந்தை அபிபுல்லா, ராமநத்தத்தில் வசிப்பதாகவும் கூறினார். ஆனாலும், இம்ரான் தன் மகன்தான் என உறுதியாக நம்பிய இந்திரா, ராமநத்தம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தார். அங்க அடையாளம்இதில், பல ஆண்டுகளுக்கு முன், சாலையோரத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற அபிபுல்லா, மகன் போல வளர்த்து வந்தது தெரிந்தது.இந்திரா கூறிய அங்க அடையாளங்களை வைத்து, அந்த வாலிபரை பரிசோதித்த போலீசார், அவர் இந்திராவின் மகன் மணிகண்டன் தான் என, உறுதி செய்தனர். இதையடுத்து, மணிகண்டன் சம்மதத்துடன், தாய் இந்திராவோடு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

திட்டக்குடி தாலுகாவில், கிராம உதவியாளராக பணிபுரியும் அபிபுல்லா கூறுகையில், ''2004ல், சாலையோரத்தில் அழுது கொண்டிருந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். ''யாரும் தேடி வராததால், இம்ரான் என பெயர் வைத்து, என் மூத்த மகன் போல வளர்த்து வந்தேன். எனக்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளனர். இம்ரானை பிரிவது வேதனையாக உள்ளது,'' என்றார். மணிகண்டன் பிரிந்து செல்வதை, தாங்க முடியாத அபிபுல்லா குடும்பத்தினர் கதறி அழுதனர். 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன், மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில், தாய் இந்திராவும் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-அக்-201911:38:00 IST Report Abuse
Lion Drsekar தாய்க்கு வாழ்த்துக்கள், அரசாங்கத்துக்கு அல்லது காவல் துறைக்கு தெரிவிக்காமல் ஓர் பிள்ளையை வீட்டுக்கு எடுத்துச்செல்வது குற்றம் இல்லையா? அப்படி இருக்க அந்த மகனுக்கு ரேஷன் கார்டில் எப்படி பெயர் சேர்க்கப்பட்டது? அப்படி என்றால் யார் வேண்டுமானாலும் யாரைவேண்டுமானாலும் கூட்டிச்சென்று இப்படி வளர்க்கலாமா? இவைகளையெல்லாம் அரசாங்கம் ஆராய்ந்து இனி இது போன்ற தவறு யாருமே செய்யக்கூடாதபடி நடவடிக்கை எடுக்குமா? இவைகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வருமா? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-அக்-201917:11:20 IST Report Abuse
இந்தியன் kumar எல்லாம் இறைவன் செயல் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
13-அக்-201922:04:56 IST Report Abuse
Pannadai Pandian pavam Abibulla…..he has the right to keep Imran with him. Some good muslims are also there.
Rate this:
Share this comment
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
16-அக்-201912:04:32 IST Report Abuse
D. Selestine Arputharajசில முஸ்லீம் நல்லவர்கள் என்று சொல்லாதே... எல்லா மதத்திலும் கெட்டவர்கள் இருக்காங்க .... முஸ்லீம் மதம்னாலே கெட்டதுனு எப்படிப்பா உங்களால பேச முடியறது...
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
17-அக்-201901:31:57 IST Report Abuse
ashakஎல்லாம் மூளைச்சலவை தான் , சுயமா யோசிக்க தெரியாத மூடர்கள் தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X