பொது செய்தி

இந்தியா

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தேவையை குறைக்க நடவடிக்கை

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (20)
Advertisement
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தேவையை குறைக்க நடவடிக்கை

புதுடில்லி: அரசு துறையில் அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இனி இணையதளங்களில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் 14-ம் ஆண்டு விழா டில்லியில் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:தகவலறியும் உரிமைச் சட்டம் கடந்த 14 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தையும் பொதுமக்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது.





இதன் மூலம் மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இனி அரசு துறைகள் குறித்த அனைத்து தகவல்களையும் இணையதளங்களில் வெளியிடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசின் வெளிப்படைத்தன்மை வாயிலாக எதிர்காலத்தில் இச்சட்டத்தின் தேவையை குறையும். தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக அதிக அளவில் மனுக்கள் தாக்கல் செய்வதும் தவிர்க்கப்படும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-அக்-201914:06:39 IST Report Abuse
Rafi தகவல் அறியும் உரிமை சட்டம், மக்கள் நேரடியாக அரசின் செயல் பாடுகளை அறிந்து கொள்ள காங்கிரஸ் அரசு செய்த சாதனை. அதன்படி இன்றைய ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்டு, ஆட்சி தலைவர் ஒருமாதிரி சொல்ல அரசின் செயல்பாடுகள் வேறுமாதிரி இருந்தது வெளியாகி, அன்றிலிருந்து அந்த சட்டத்திலிருந்த மக்களின் அதிகாரத்தை எப்படி நசுக்கலாம் என்பதை இவர்களின் எதிர்மறையான சிந்தனையில் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள்..எப்படியாகிலும் இனி உண்மை நிலவரம் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-அக்-201913:48:20 IST Report Abuse
Malick Raja எல்லாம் கொஞ்சநாள் ஆட்டம்தான் ..ஆடட்டும் பார்க்கலாம். ஹிட்லர் ஆடாத ஆட்டமா? ஓய்ந்ததா இல்லியா.. சமீபகாலத்தில் அத்வானி ஆடாத ஆட்டமா? இப்போது நிலையை உலகமே காண்கிறது.. ஆக ஒவ்வொருவர் வருவதும் போவதும் இயற்க்கை.. ஆடி அடங்கும் வாழ்க்கையடா... அதாவது வாழ்க்கையே அடங்கும் பின்ன இந்த பதவி எவ்வளவு காலம் .. 2014. - 2019. போனது யாரும் அறியாமல் சென்றது போல 2019-2024.ம் போகும் இடையில் போவோரும் உண்டு வருவோரும் உண்டு .. ஆக தங்களின் உண்மை நிலை நியற்றதை என்பதை உணராதவர்கள் மட்டுமே பதவியை அதிகமாக நேசித்து கடைசியில் ஏண்டா இப்படி நடந்தோம் என்று பிறருக்கு உணர்தாமேலேயே இறுதிக்கு சென்றுவிடுவதும் இயல்புதான்
Rate this:
Share this comment
Cancel
we -  ( Posted via: Dinamalar Android App )
13-அக்-201911:30:35 IST Report Abuse
we சூனா பானா பாணியில, கஷ்டபட்டு கூட்டத்தை கலைச்சு பஞ்சாயமே இல்லாம பண்ண பாக்குறாரு.தகவல தந்தாத்தான, இவங்க பத்திஉண்மை வெளியவரும்.எல்லாம் முன்னெச்சரிக்கைதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X