பொது செய்தி

தமிழ்நாடு

ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு ஊர்வலம்

Added : அக் 13, 2019
Share
Advertisement

மதுரை: மதுரையில் தேவதாஸ் மருத்துவமனை சார்பில் உலக விபத்து தினத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகள் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிய வலியுறுத்தி டூவீலர்கள் ஊர்வலம் நடந்தது.ரேஸ்கோர்சில் மருத்துவமனை இயக்குனர் சதீஷ்தேவதாஸ் தலைமையில் டாக்டர் மதுபுருஷோத்தமன் துவக்கினார். மருத்துவமனை தலைவர் தேவதாஸ், சீனியர் பொது மேலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஊர்வலத்தில் 220 டூவீலர்கள் பங்கேற்றன. மருத்துவமனை முன் முடிவுற்றது. பங்கேற்ற மாணவர், ஆசிரியருக்கு முதலுதவி செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. சர்வேயர்காலனி சிக்னலில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்டிய 200 பேருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. போலீசாருக்கு சிக்னல் டார்ச் மற்றும் ஒளிரும் சீருடைகள் வழங்கப்பட்டன.அக்.,11 முதல் நடந்த உலக விபத்து தின சிறப்பு நிகழ்ச்சிகளில் மாணவர், தொழிற்சாலை பணியாளருக்கு முதலுதவி பயிற்சி மற்றும் மருத்துவ கண்காட்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியை தினமலர் இணைந்து வழங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X