பொது செய்தி

தமிழ்நாடு

மனமிருந்தால் மகாத்மா ஆகலாம் துணைவேந்தர் பேச்சு

Added : அக் 13, 2019
Advertisement

மதுரை: ''மனமிருந்தால் மகாத்மா ஆகலாம்'' என மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் பேசினார்.மதுரை சேவாலயம் இல்லத்தில் காந்தி கதை மன்ற துவக்க விழா நடந்தது. செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். துணைவேந்தர் கிருஷ்ணன் பேசியதாவது: உண்மையும், அன்பும் பெற்று அகிம்சை வழியில் வாழ்ந்து உலகிற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் காந்தி. அவர் வழியில் மாணவர்கள் வாழ்ந்து காட்டுங்கள். உண்மை, உழைப்பு என்ற மனம் இருந்தால் அனைவரும் மகாத்மா ஆகலாம். அப்துல்கலாமின் கனவை நனவாக்க நாட்டை வல்லரசாக்க வேண்டும். பாரம்பரிய விளையாட்டுகளால் உடல், மனம் வலுப்பெறும் என்றார்.தலைமை வகித்து தாசில்தார் பாலாஜி பேசியதாவது: சொல்லும், செயலும் துாய்மையாக இருக்க வேண்டும். மாணவர்கள் வேலை, பதவிக்காக கல்வி கற்கக்கூடாது. அறிவை வளர்க்கவும், ஒழுக்கத்தை கடைபிடிக்கவும் பயன்பட வேண்டும். துாய்மையான பாரத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்லும் பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது என்றார்.பல்கலை செனட் உறுப்பினர் சந்திரபிரபு, இளங்கோ பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியை ராணி செய்தார். காப்பாளர் கார்த்திகேசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X