பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க மானியம்

Added : அக் 13, 2019
Advertisement

மதுரை,: மதுரை மாவட்டத்தில் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.50 லட்சம் மானியமாக வழங்க அரசு ஒதுக்கியுள்ளது.வேளாண் பொறியியல் துறையினர் கூறியதாவது: விவசாய தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்ய, விவசாய பணிகளை உரிய காலத்தில் விரைந்து முடித்திட, உற்பத்தியை பெருக்கி வருமானத்தை அதிகரிக்க வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வேளாண் இயந்திரமயமாக்கல் சார்பு இயக்கம் சார்பில் 2019-20ம் நிதியாண்டில் விவசாயிகள், சுய உதவி குழுக்கள், தொழில் முனைவோருக்கு வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சத்தில் வாடகை மையம் வட்டார அளவில் அமைக்க 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண் பொறியியல் பிரிவை 0452-267 7990ல் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X