பொது செய்தி

தமிழ்நாடு

ஏனோ... தானோ... குறைதீர் கூட்டம்டி.இ.ஓ.,க்கள் விசாரிக்க உத்தரவு

Added : அக் 13, 2019
Advertisement

மதுரை: மதுரையில் 15 வட்டார கல்வி அலுவலகங்களில் (பி.இ.ஓ.,) நடக்கும் ஆசிரியர் குறைதீர்க் கூட்டங்கள் குறித்து டி.இ.ஓ.,க்கள் விசாரணை நடத்த முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.மாதம் முதல் சனிக்கிழமையன்று இந்த அலுவலகங்களில் ஆசிரியர், அலுவலருக்கான நடக்கும் குறைதீர் கூட்டங்கள் பெயரளவில் நடப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டது. இதுகுறித்து விசாரிக்க மதுரை, மேலுார், உசிலம்பட்டி, திருமங்கலம் டி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டது. பி.இ.ஓ.,க்களிடம் நேரில் விளக்கம் கேட்கப்பட்டது. மேலுார் கூட்டத்தில் பி.இ.ஓ.,க்கள் சிலர் 'ஆப்சென்ட்' ஆயினர்.உசிலம்பட்டி டி.இ.ஓ., முத்தையா கூறியதாவது:பி.இ.ஓ.,க்கள் செயல்பாடுகளை கண்காணிக்கவும், கூட்டங்களில் இதுவரை வரப்பெற்ற புகார், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும் சி.இ.ஓ., உத்தரவிட்டார். கூட்டமும் நடந்தது. பி.இ.ஓ., அலுவலகத்தில் 2 மாதம் ஒருமுறை ஆண்டாய்வு நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார். ஆய்வு விவரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X