பொது செய்தி

தமிழ்நாடு

பதவி ஆசை கூடாதுதிருச்சி கல்யாணராமன் பேச்சு

Added : அக் 13, 2019
Share
Advertisement

மதுரை,: அனுஷத்தின் அனுகிரகம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி பிரண்ட்ஸ் எம்.ஆர்.பி., திருமண மண்டபத்தில், திருச்சி கல்யாணராமனின் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடக்கிறது. நேற்று அவர் பேசியதாவது: ஆட்சியை ராமன் விட்டுக் கொடுத்தான். பரதன் தனக்கு தகுதி இல்லை என நிராகரித்தான். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தமக்கு தகுதி இல்லாததை தவிர்க்க வேண்டும். தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். பின் அதை போதிக்க வேண்டும். பிரச்னை உள்ள இடத்தில் இருக்கக்கூடாது. பதவிக்கு ஆசைப்பட்டால் கொள்கையை விட வேண்டும். கொள்கையுடன் இருந்தால், பதவிக்கு ஆசைப்படக்கூடாது. வாழ்வில் மேம்பட பெற்றோர் சொல்படி நடக்க வேண்டும். ராமாயணத்திற்கு பின்தான் கிரந்தங்கள். மகாத்மா காந்தி ராமாயணம் கேட்டார். அதனால்தான், 'ரகுபதி ராகவ ராஜாராம்' என்றார். ராம நாமா மந்திரத்தை தொடர்ந்து ஜெபம் செய்தால், மழை பெய்யும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X