3 படங்கள் ரூ.120 கோடி வசூல்:பொருளாதார மந்தம் இல்லை

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (92)
Advertisement

மும்பை: கடந்த 2-ம் தேதி வெளியான மூன்று திரை படங்கள் ரூ.120 கோடி அளவிற்கு வசூலாகி உள்ளது. இதனால் நாட்டில்பொருளாதார மந்த நிலை நிலவ வில்லை என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறி உள்ளார்.






மும்பையில் அவர் கூறியதாவது: நாட்டின்பொருளாதர அடிப்படை கட்டமைப்புகள் வலுவானவையாக உள்ளன. பணவீக்கம் குறைவாக இருந்த போதிலும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது. மொத்த வருமான வரி வசூல் இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. அந்நிய நேரடி முதலீடு 20 சதவீதம் அதிகரித்து உள்ளது. 16.3 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு மொத்த முதலீடாக இந்தியாவிற்கு வந்துள்ளது.





கடந்த 2-ம் தேதி வெளியான மூன்று திரைப்படங்கள் ரூ.120 கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது. நல்லபொருளாதாரம் கொண்ட நாட்டில் 120 கோடி ரூபாய் வருகிறது. உலகளாவிய நிலையில் பொருளாதாரம் மந்த நிலையாக இருந்தபோதிலும் இந்திய பொருளாதாரம் 6 சதவீதத்திற்கும் அதிகாக வளர்ந்து வருகிறது என்றார்.


கடந்த நான்காண்டுகாலத்தில் ஐ.டி.,துறையில் 5.5 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இ.பி.எப் கணக்குளின் எண்ணிக்கை 2 கோடி அதிகரித்துள்ளது. புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படுவதால் மட்டுமே கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரதமர் மோடி நேர்மையான அரசாங்கத்தை வழங்குகிறார். அவர் தேசிய வாதத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறார். அதே போல் மும்பையில் பட்னாவிஸ் அரசும் தூய்மையான திறமையான அரசாங்கத்தின் மாதிரியாக திகழ்கிறது .மக்கள் மீண்டும் அவரையே தேர்ந்தெடுப்பதில் உறுதியாக உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-201908:22:01 IST Report Abuse
Bhaskaran தமிழகத்தின் தெர்மோகோல் விஞ்ஞானியை தோற்கடித்த அறிவாளி நீடூழி வாழ்க
Rate this:
Share this comment
Cancel
13-அக்-201919:46:13 IST Report Abuse
kulandhai Kannan ஆனால் கார் விற்பனை சரிவைமட்டும் மட்டும் அளவுகோலாக எடுத்துக்கொள்வார்கள் அறிவு ஜீவிகள். ஒருவேளை கார் விற்பனை மட்டும் உயர்ந்தால், பணக்கார உபயோகப் பொருட்களைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்பார்கள் இந்தப் பொருளாதாரப் புளிகள்
Rate this:
Share this comment
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா
13-அக்-201918:37:18 IST Report Abuse
B. இராமச்சந்திரன் தமிழ்நாட்டில் பொருளாதார மந்த நிலையை கணக்கிட சினிமாவுடன் டாஸ்மாக் விற்பனையையும் கணக்கில் எடுத்து கொள்ளலாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X