சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளையன் கைது

Added : அக் 13, 2019
Share
Advertisement

ஊத்துக்கோட்டை:மாவட்டத்தின் பல பகுதிகளில், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையன் கைது செய்யப்பட்டு, 25 சவரன் நகை, 3.45 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
எல்லாபுரம் ஒன்றியம், தாராட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சையதுஅஜிமுதீன், 61. கடந்த ஜூலை, 12ம் தேதி, ஊத்துக்கோட்டை வங்கி லாக்கரில் வைத்திருந்த, 52 சவரன் நகை எடுத்து, தன் ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, எதிரில் உள்ள நண்பர் கடைக்குச் சென்றார்.பின், திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நகை காணாமல் போனது.இதேபோல், பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி, திருவள்ளூர், பொன்னேரி, வெள்ளவேடு ஆகிய இடங்களிலும் லட்சக்கணக்கில் பணம் கொள்ளை போனது.திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன் உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டை போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர்.இதில், நகரி மண்டலம், ஓ.ஜி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, கிருஷ்ணன், 44 என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, 25 சவரன் நகை, 3.45 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்ட கிருஷ்ணன், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X