பொது செய்தி

தமிழ்நாடு

டிக்கெட் முன்பதிவில் தில்லுமுல்லு: விதிமீறும் ஆம்னி பஸ் நிறுவனங்கள்

Added : அக் 13, 2019
Advertisement

கோவை:தீபாவளிக்கு வெளியூர் செல்ல, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதுடன், சில ஆம்னி பஸ் நிறுவனங்கள், கட்டண விவரங்களை 'பிளாக்' செய்துள்ளன.வரும், 27ல் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் கூட்டநெரிசலை பயன்படுத்தி, ஆம்னி பஸ் நிறுவனங்கள், இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கின்றன.
கோவையில் இருந்து பெங்களூரு, சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு, 100க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. டிக்கெட் முன்பதிவுக்கென ஆம்னி பஸ் நிறுவனங்கள் பிரத்யேகமாக இணையதளங்கள் பயன்படுத்துகின்றன. ஏ.சி., - 'நான் ஏ.சி.,' சீட்டர், செமி ஸ்லீப்பர், ஸ்லீப்பர் வசதிக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கட்டணம் நிர்ணயம் தொடர்பாக, போக்குவரத்து விதிகள் கடுமையாக இல்லாததால், பயணிகளிடம் அதிகப்படியான தொகை வசூலிக்கப்படுகிறது. வரும், 26 மற்றும், 27ம் தேதிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய, வழக்கமான கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக, கோவை - சென்னைக்கு வழக்கமாக வசூலிக்கப்படும், 950 ரூபாய் ஏ.சி., ஸ்லீப்பர் கட்டணம், 1,800 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவை - மயிலாடுதுறைக்கு வழக்கமான, 340 ரூபாய் 'நான் ஏ.சி., சீட்டர்' கட்டணம், 999 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.சில பஸ் நிறுவனங்கள், தீபாவளி மற்றும் முந்தைய, பிந்தைய தேதிகளில் கட்டணத்தை குறிப்பிடாமல் 'பிளாக்' செய்துள்ளன. சில நிறுவனங்கள், நான் ஏ.சி., கட்டணங்கள் மட்டும் குறிப்பிட்டுள்ளன; ஏ.சி., வகுப்பு கட்டணம் குறிப்பிடவில்லை.
கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனர் (பொ) ஜெய்சங்கரன் கூறுகையில், ''பண்டிகை சமயத்தில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.'ஆன்-லைன்' விதிமீறல்பண்டிகை சமயத்தில் சோதனையை தீவிரப்படுத்தும் போக்குவரத்து துறையினர், ஆன்லைனில், விதிமீறும் ஆம்னி பஸ் நிறுவனங்களை கண்காணித்து, 'ஸ்பாட் செக்கிங்' செய்தால், கட்டண கொள்ளையை கட்டுப்படுத்த முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X