சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்ம சாவு

Added : அக் 13, 2019
Advertisement
 போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் மர்ம சாவு

ஊத்துக்கோட்டை:போலீஸ் விசாரணைக்குச் சென்று வந்த வாலிபர், மர்மமான முறையில் இறந்த நிலையில் இருந்ததைக் கண்ட பொதுமக்கள், ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பூண்டி ஒன்றியம், கூனிப்பாளையம் அருகே, கடந்த, 4ம் தேதி நடந்த சாலை விபத்தில், திம்மபூபாலபுரம் காலனியைச் சேர்ந்த பாஸ்கர், 30 என்பவருக்கு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.தெரியாது என்றார்இதில், டிராக்டருடன் ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார். பென்னலுார்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், விபத்தை பார்த்ததாக வந்த தகவலையடுத்து, ராஜபாளையம், அருந்ததி காலனியைச் சேர்ந்த சந்திரய்யா, 45 என்பவரை, போலீசார், கடந்த, 7ம் தேதி விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.அப்போது, விபத்து குறித்து தனக்கு எதுவும் தெரியாது என, கூறியுள்ளார். பின், சந்திரய்யாவை, கிராம மக்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது, தான் தாக்கப்பட்டதாக, உறவினர்களிடம் சந்திரய்யா கூறியுள்ளார்.பின், யாரிடமும் சொல்லாமல், திருப்பதி சென்று விட்டு, நேற்று முன்தினம் சந்தரய்யா வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
மரத்தில் துாக்கு
இந்நிலையில் சந்திரய்யா, நேற்று காலை, அங்குள்ள காட்டுப் பகுதியில், மரத்தில் துாக்கிட்டு, பிணமாக தொங்கியபடி காணப்பட்டுள்ளார்.திருவள்ளூர் பொறுப்பு டி.எஸ்.பி., கங்காதரன், ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் சென்று பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.ஆனால், போலீசார் தாக்கியதில் தான் அவர் இறந்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிணம் எடுத்து வந்த வாகனத்தை மடக்கி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், விசாரித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றனர். இதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X