பொது செய்தி

தமிழ்நாடு

வீண் அலைச்சலை தவிர்க்க ஆன்-லைனில் அங்கீகாரம்

Added : அக் 13, 2019
Advertisement

கோவை:தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறும் நடைமுறை, நடப்பாண்டு கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது.கும்பகோணம் தீ விபத்து சம்பவத்துக்கு பின், தனியார் பள்ளிகளுக்கான உரிமம் பெறும் நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டன. பிளே ஸ்கூல் முதல், மேல்நிலை வகுப்பு வரை செயல்படும், பள்ளிகளுக்கு பிரத்யேகமாக வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டன.
கட்டட உறுதி, தீயணைப்பு, சுகாதார சான்றிதழ் பெற்றால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில், மூன்று ஆண்டுகளுக்கு தொடர் அங்கீகாரம் நீட்டிக்கப்படுகிறது. இதற்கு, சான்றிதழ் சமர்ப்பித்தாலும், அங்கீகாரம் பெற, இடைத்தரகர்களை நாட வேண்டியிருப்பதாக புகார் எழுந்தது.இதனால், அங்கீகாரம் பெறும் நடைமுறைகள் நடப்பாண்டு கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டன. 'எமிஸ்' இணையதளத்தில், தனியார் பள்ளிகள், உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அதிகாரிகள் ஆய்வுக்கு பின், அங்கீகாரம் வழங்கப்படும். இந்நடைமுறையால், வீண் அலைச்சல், இடைத்தரகர்களை நாடும் நிலைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெறாமல் செயல்படும், தகுதியில்லாத பள்ளிகளை எளிதில் அடையாளம் காணலாம். இப்பள்ளிகளை ஆய்வு செய்து, சீல் வைக்கவும் முடியும்.ஆன்-லைன் நடைமுறையால், தகுதியுள்ள தனியார் பள்ளிகளுக்கு, எந்த சிக்கலும் இல்லை. உரிய அவகாசத்துக்கு முன்பே, அங்கீகாரம் புதுப்பிக்க அறிவுறுத்தப்படும். சான்றிதழ் சமர்ப்பித்தால், தொடர் அங்கீகாரம் வழங்கப்படும். உரிய ஆவணம் இல்லாத பள்ளிகளை, அதிகாரிகள் எளிதில் அடையாளம் காணலாம். ஆன்-லைனில் ஆவணம் சமர்ப்பிக்க சிக்கல் இருந்தால், கல்வித்துறை அலுவலகங்களை நேரில் அணுகலாம்.-கீதா, மாவட்ட கல்வி அலுவலர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X