சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம காய்ச்சலுக்கு 2 மாணவர்கள் பலி

Added : அக் 13, 2019
Advertisement
 மர்ம காய்ச்சலுக்கு 2 மாணவர்கள் பலி

திருத்தணி:மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இறந்தார்.
திருத்தணி ஒன்றியம், தெக்களூர், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர், சங்கர், 45. கட்டட தொழிலாளி. இவரது மகள் லோகேஸ்வரி, 13. இவர், திருத்தணி, சி.எஸ்.ஐ. உயர்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், கடந்த, 6ம் தேதி, லோகேஸ்வரிக்கு காய்ச்சல் வந்தது. அவரது பெற்றோர், திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவரிடம் சிகிச்சை அளித்தனர். பின், லோகேஸ்வரியை பள்ளிப்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.அங்கு, காய்ச்சல் அதிகரித்ததால், லோகேஸ்வரியை பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், லோகேஸ்வரியை, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கும், காய்ச்சல் குறையாததால், மேல்சிகிச்சைக்காக, நேற்று முன்தினம், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு, லோகேஸ்வரியை அனுப்பி வைத்தனர். அங்கு, நேற்று அதிகாலை இறந்தார்.நேற்று முன்தினம், திருத்தணி தாலுகா, மருதவல்லிபுரம் கிராமத்தில், 'டெங்கு' காய்ச்சலால், 11 மாத குழந்தை நிஷாந்த் இறந்தது குறிப்பிடத்தக்கது.தகவல் அறிந்ததும், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ் தலைமையில், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், தெக்களூரில் முகாமிட்டு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X