பொது செய்தி

இந்தியா

வங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (60)
Advertisement
 வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள்,ரிசர்வ் வங்கி...எச்சரிக்கை

புதுடில்லி: 'வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், 2020, ஜனவரி, 1க்குள், கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பிக்காவிட்டால், அந்த வங்கி கணக்கு முடக்கப்படும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ, 'ஆன்லைன்' மூலமோ,பணப்பரிமாற்றம் செய்ய முடியாது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், வங்கிகளில் கணக்கு துவங்கும் போது, குறிப்பிட்ட நபரை பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள, கே.ஒய்.சி., எனப்படும், சுய விபரக் குறிப்புகள் கொண்ட படிவத்தை சமர்ப்பிக்கும் நடைமுறை, பின்பற்றப்படுகிறது.இதன்படி, வாடிக்கையாளரின் அடையாள சான்று, இருப்பிட சான்று, தொலைபேசி மற்றும் 'மொபைல்' எண், 'இ - மெயில்' முகவரி, புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை, வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
உத்தரவு
இந்த, கே.ஒய்.சி., ஆவணங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்கவும், வங்கி கணக்கு மூலம், பயங்கரவாத அமைப்புகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்ற முறை மற்றும் இதர தன்மைகளின் அடிப்படையில், கே.ஒய்.சி., புதுப்பிப்பதற்கான கால அளவு மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு ஆண்டுகள், எட்டு ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த, கே.ஒய்.சி., படிவம், புதுப்பிக்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.


சமர்ப்பிக்கவும்


'கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்க, கணக்கு வைத்துள்ள வங்கி கிளைக்கு சென்று, அங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 'சுய விபரக்குறிப்பில் மாற்றம் எதுவும் இல்லாத வாடிக்கையாளர்கள், வங்கியின் இணைய தளத்தில், 'கே.ஒய்.சி.,யில் மாற்றமில்லை' என்ற இணைப்பை, 'கிளிக்'செய்வதன் மூலம், புதுப்பிக்கும் பணியை செய்து கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எஸ்.பி.ஐ., ஐ.டி.பி.ஐ., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, இது தொடர்பான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றன. அதில், வரும், 2020, ஜனவரி, 1க்குள், கே.ஒய்.சி., விபரங்களை புதுப்பிக்குமாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.'ஜனவரி, 1க்குள் புதுப்பிக்கப்படாத வங்கி கணக்குகள், முடக்கப்படும் என்றும், அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ அல்லது 'ஆன்லைன்' மூலமோ, பணப் பரிமாற்றம் செய்ய முடியாது' என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Trichy,இந்தியா
18-அக்-201921:40:15 IST Report Abuse
Raj <ரூ 25,000 கீழ் பேலன்ஸ் உள்ளவருக்கும் பாவப்பட்ட தொழிலாளிக்கும் சீனியர் சிட்டிஸினுக்கும் இதன் கெடுபிடியை தளர்த்தலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
17-அக்-201911:20:15 IST Report Abuse
karutthu எல்லாம் மிரட்டுகிற மாதிரிதான் சொல்லுவான்கள் நேரே போனால் அதைக்கொடு இதைக்கொடு என சுத்தலில் விடுவான்கள் நம்ம பணத்தை இவனிடம் கொடுத்து விட்டு நம்ம படாத பாடு படவேண்டிஇருக்கிறது அந்த படிவத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் பிறகு நாம் அதை நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பிவிடலாம் .ஆர் பி ஐ ஏன் வங்கிகளுக்கு இப்படி செய் என உத்தரவு இடக்கூடாது .
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
18-அக்-201919:13:31 IST Report Abuse
madhavan rajanபடிவத்தை வீட்டுக்கு அனுப்புவதில்தான் பிரச்சினையே. வீடு மாறிவிடுகிறார்கள் புது விலாசத்திற்கு ஆவணங்கள் கொடுத்து வங்கிகளில் தெரிவிப்பதில்லை. அவர்கள் கேட்பதெல்லாம்.பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு. ஆதார் கார்டில் உள்ள விலாசத்தில் இல்லையென்றால் புதிய விலாசத்திற்கான ஆதாரம். இந்த மூன்றையும் கேட்கும்போது கொடுத்தாள் எந்த பிரச்சினையும் இல்லை. லட்சக்கணக்கில் பண பரிமாற்றம் செய்பவர்களுக்குத்தான் பிரச்சினை. ஒரு காலத்தில் நூறு ரூபாய் எடுக்க வேண்டும் என்றால் கூட வங்கி வேலை நேரத்தில் வங்கியில் போய் வரிசையில் நிற்கவேண்டும். இப்போது பல வேலைகளுக்கு வங்கிக்கே போகவேண்டாம். (பாஸ் புக் அச்சடித்தல், பணம் எடுத்தல், பணம் போடுதல், செக் டெபாசிட் போன்றவைகளுக்கு ATM வந்துவிட்டன). சரியான ஆதாரம், விலாசம் கொடுப்பதற்கு கூட முடியாது என்றால் என்ன செய்வது? இங்கு இவ்வளவு குறை சொல்பவர்கள் அங்கு பணியாளர் சரியில்லை என்றால் புகார் செய்யத்தயாரா?...
Rate this:
Share this comment
Cancel
Chandrasekaran Narayanan - Hosur,இந்தியா
15-அக்-201918:53:25 IST Report Abuse
Chandrasekaran Narayanan ஏழைகள், ஓய்வு பெற்றோர், சிறு வியாபாரிகள், மாத சம்பளம் பெறுவோரை விட்டு விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X