சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் 4பேர் இறப்பு

Added : அக் 13, 2019
Advertisement

திருமுல்லைவாயல்:திருமுல்லைவாயலில், கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஏழு பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், நால்வர் பரிதாபமாக பலியாகினர். ஒரு பெண், இரண்டு குழந்தைகள் உட்பட மூவர், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமுல்லைவாயல், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 65; கொத்தனார். இவரது மனைவி சுப்பம்மாள், 60. இவர்களது மகன்கள் நாகராஜ், 35, ரவி, 30; மகள் கல்யாணி, 28. மூவருக்கும் திருமணமாகிவிட்டது.கல்யாணியின் கணவர், அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 35. இவர்களுக்கு, சரஸ்வதி, 8, யோகப்பிரியா, 6, ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இரு தினங்களுக்கு முன், கல்யாணி, தன் மகள்களுடன், தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று மாலை, 6:00 மணியளவில், மனைவி, மகள்களை அழைத்து வர, ஆறுமுகம், மாமியார் வீட்டிற்குச் சென்றார்.அப்போது, அவரது மாமனார், மாமியார், அவர்களது மகன்கள் என, நால்வரும் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தனர். கல்யாணி மற்றும் குழந்தைகள், வாயில் நுரை தள்ளி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதிர்ச்சியடைந்த ஆறுமுகம், தன் மனைவி, மகள்களை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து, மூவரும் மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீசார், நால்வரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதல்கட்ட விசாரணையில், கோவிந்தசாமிக்கு, தனியார் நிதி நிறுவனத்தில், 80 லட்சம் ரூபாய் மேல் கடன் இருப்பதும், அடமானத்தில் இருந்த வீடு மீட்க முடியாத நிலையில் இருப்பதும் தெரியவந்தது. கடன் பிரச்னையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடில், சில மாதங்களுக்கு முன், கோவிந்தசாமியின் மூத்த மருமகள், நாகராஜை பிரிந்து சென்றார். இளைய மருமகளும், சமீபத்தில் ரவியை பிரிந்து சென்றார்.இதனால் மனமுடைந்து, கோவிந்தசாமி தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X