பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் நாளை முதல், 'மொபைல் போன்' சேவை

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 நாளை முதல், 'மொபைல் போன்' சேவை

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, 'மொபைல் போன்' சேவை உட்பட தொலை தொடர்பு சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. பின், தொலைபேசி இணைப்புகள் செயல்படத் துவங்கின. ஆனால், மொபைல் போன் மற்றும் இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டன.
ஜம்மு பிராந்தியத்தில், மொபைல் போன் மற்றும் இணையதள சேவைகள், சில நாட்களிலேயே மீண்டும் செயல்படத் துவங்கின. ஆனால், தவறாகப் பயன்படுத்தப்பட்டதால், இணையதள சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டன.





ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், மொபைல் போன் சேவை அளிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில், மாநிலத்துக்கு, சுற்றுலாப் பயணியர் வருகைக்கு இருந்த தடை நீக்கப்பட்டது.'மொபைல் போன் சேவை இல்லாத நிலையில், சுற்றுலாப் பயணியர் வருகை தரமாட்டார்கள்' என, இத்துறையில் ஈடுபட்டுள்ளோர் மாநில நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதையடுத்து, காஷ்மீர் பிராந்தியத்திலும், மொபைல் போன் இணைப்புகள், நாளை முதல் செயல்படும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.'போஸ்ட் பெய்ட்' எனப்படும், பயன்படுத்திய பிறகு கட்டணம் செலுத்தும் இணைப்புகள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இணையதள வசதியை தற்போதைக்கு பயன்படுத்த முடியாது.இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரில், மக்கள் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கப்பட்டு, அங்கு, 99 சதவீதம் இயல்புநிலை திரும்பி இருப்பதாக, மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.''அமைதியை கெடுக்க முயற்சிக்கும், நாட்டுக்கு வெளியில் இருந்து இயக்கப்படும் பயங்கரவாதிகளை தடுப்பதற்கே, சிறிதளவில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன,'' என்றும் அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-அக்-201919:23:15 IST Report Abuse
kulandhai Kannan இந்தியாவில் இயங்கும் பல தேசவிரோத குழுக்களுக்கும், ஊடகங்களுக்கும் பதற்றமாக இருக்கும், எங்கே காஷ்மீரில் படிப்படியாக அமைதி திரும்பிவிடுமோ என்று..
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
13-அக்-201910:55:42 IST Report Abuse
வல்வில் ஓரி இனிமே கல்லெறிதல் அப்பப்போ நடக்கும் பாரேன் ... சுதந்திரத்தை அனுபவிக்க கூட தெரியாத பக்கிகளுக்கு சுதந்திரம் கொடுப்பது குற்றம்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
13-அக்-201908:55:05 IST Report Abuse
blocked user சீனா போல சமூக வலைத்தளங்களை முடக்கினாலே பாதி பிரச்சினை ஓவர். பின்னர் தேசவிரோதமாக செயல்படும் பத்திரிக்கைகள்... எல்லாம் சரியாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X