பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி அழைத்து வரப்பட்ட கொள்ளையன் புதைத்து வைத்திருந்த நகைகள்

Added : அக் 13, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெரம்பலூர்: திருச்சி, லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாக, பெங்களூரில் சரணடைந்த முருகன், திருச்சி அழைத்து வரப்பட்டார். அவர் புதைத்து வைத்திருந்த, 12 கிலோ நகைகளை, போலீசார் மீட்டனர்.
திருச்சி, லலிதா ஜுவல்லரியில், 2ம் தேதி நள்ளிரவு, 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.

பெங்களூரில் சரண்: இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான, திருவாரூர் முருகன், நேற்று முன்தினம், பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பெங்களூரில், இவர் மீது, ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பெங்களூரு பொம்மனஹள்ளி போலீசார், முருகனை, 'கஸ்டடி' எடுத்து விசாரித்தனர். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நகை கொள்ளையில் ஈடுபட்டதையும், திருச்சி, லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக, திருச்சி போலீசார் தேடுவதால், நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும் முருகன், போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, திருச்சி, திருவெறும்பூர் அருகே வேங்கூரில், தான் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு அருகில், காட்டுப் பகுதியில் புதைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துஉள்ளார். இதையடுத்து, பொம்மனஹள்ளி போலீசார், நேற்று முன்தினம் இரவு, முருகனை திருச்சிக்கு காரில் அழைத்து வந்தனர். திருச்சி போலீசாருடன் இணைந்து, முருகன் அடையாளம் காட்டிய இடத்தில், தேடுதல் வேட்டை நடத்தினர்.

4.30 கோடி ரூபாய்: திருவெறும்பூர் அருகே, பூசத்துறை பகுதியில், ஐந்து மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 4.30 கோடி ரூபாய் மதிப்புள்ள, 12 கிலோ நகைகளை கைப்பற்றினர்.தொடர்ந்து, பெரம்பலூர், ஆயுதப்படை போலீஸ் மண்டபத்தில், முருகனிடம் விசாரணை நடத்தினர். லலிதா ஜுவல்லரி மேலாளரை வரவழைத்த திருச்சி போலீசார், பறிமுதல் செய்த நகைகளை சரி பார்த்தனர். அவை லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது உறுதியானது. நகைகள் பட்டியலை, திருச்சி போலீசாரிடம் ஒப்படைத்த பெங்களூரு போலீசார், முருகன் மற்றும் கைப்பற்றிய நகைகளுடன், நேற்று மாலை, பெங்களூரு புறப்பட்டு சென்றனர். 'பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்' என, கர்நாடகா போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
13-அக்-201919:01:21 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஐயா வான் ஒருகேவலமான கொள்ளையன் இவனுக்கு என்னாத்துக்கு மரியாதை அவன் இவன் என்று சொல்லவும் மரியாதைக்கு உரிய நபரா இவனெல்லாம் வெட்கமா இல்லீங்களா அடிக்கற அடிலே உசிரே போவணும் கேவலமா இல்லியா அபத்தமா இருக்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X