பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு தொகை கேட்டு மறியல்

Added : அக் 13, 2019
Share
Advertisement

மயிலாடுதுறை: காப்பீடு நிறுவனங்களை கண்டித்து, சீர்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரை, போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டத்தில், கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீடு, 146 கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை. உரிய நேரத்தில் வழங்காமல், காலம் தாழ்த்தும் காப்பீடு நிறுவனங்களை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், 4ம் தேதி சாலை மறியல் போராட்டம் அறிவித்தனர். அப்போது நடந்த சமாதான கூட்டத்தில், வேளாண் துறை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றதால், கூட்டம் நடக்கவில்லை. சமாதான கூட்டமும் நடத்தாமல், காப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கபடாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அனைவருக்கும் பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தியும், சம்பா சாகுபடிக்கு, இதுவரை முழுமையாக தண்ணீர் வழங்காத பொதுப்பணித் துறையை கண்டித்தும், கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனே தண்ணீர் வழங்க வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட, 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X