பொது செய்தி

இந்தியா

'மாடர்ன்'ஆக மாற மறுத்த மனைவிக்கு முத்தலாக்

Updated : அக் 13, 2019 | Added : அக் 13, 2019 | கருத்துகள் (40)
Advertisement

பாட்னா : மாடர்ன் பெண்ணாக மாறி மது அருந்தி, மாடர்னான உடைகளை அணிய மறுத்த மனைவியை, அவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ள சம்பவம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்துள்ளது.





இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பாத்திமா கூறுகையில், இம்ரான் முஸ்தபாவிற்கும் எனக்கும் 2015 ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆன சில நாட்களிலேயே நாங்கள் டில்லிக்கு குடியேறி விட்டோம். சில மாதங்களுக்கு பிறகு நகரில் உள்ள மற்ற மாடர்ன் பெண்களைப் போன்று என்னையும் குட்டையான உடைகளை அணிய சொல்லி கட்டாயப்படுத்தினார். அத்துடன் இரவு நேர பார்டிகளுக்கு செல்லவும், மது அருந்தவும் சொல்லி வற்புறுத்தினார். அதற்கு நான் மறுத்ததால் தினமும் என்னை அடித்து துன்புறுத்தினார்.பல ஆண்டுகளாக என்னை அடித்து துன்புறுத்தி வந்த அவர், சில நாட்களுக்கு முன் என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினார். அதற்கு நான் மறுத்ததால் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார் என்றார்.




கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது தொடர்பாக பாத்திமா, பீகார் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இது பற்றி பீகார் மகளிர் கழக தலைவர் தில்மானி மிஸ்ரா கூறுகையில், இப்பெண்ணை அவரது கணவர் அடித்து துன்புறுத்தியதுடன், கட்டாயப்படுத்தி 2 முறை கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். செப்.,1 அன்று இப்பெண்ணிற்கு முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இப்பெண் அளித்துள்ள புகாரின் பேரில் அவரது கணவர் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
14-அக்-201923:20:14 IST Report Abuse
Rafi இஸ்லாம் கூறியுள்ள உடையை புறக்கணிப்பவனுடன், இஸ்லாத்தின் நடை முறைக்கு எதிராக குடிக்க வற்புறுத்துபவன், இவனோடு வாழ்வதே மறுமை வாழ்க்கை நரகத்திற்கு அழைத்து விடும். இந்த சகோதரியே அவனுக்கு தலாக் சொல்லிவிடுவதே மேல். திருமணம் செய்துவைத்த ஜமாத்தில் தொடர்பு கொண்டு குற்றசாட்டை பதிவிடுங்கள், அவனால் வேறு ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கையை சீரழிக்காமல் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். நல்ல ஒரு இஸ்லாமியரை அல்லாஹ் துணையாக்குவான். இஸ்லாம் ஒழுக்கத்துடன் வாழவே வலியுறுத்துகின்றது.
Rate this:
Share this comment
Chichu Damal - Panama,பனாமா
15-அக்-201915:16:06 IST Report Abuse
Chichu Damalஅப்போ குஷ்பூ போட்டதெல்லாம்? (நான் ட்ரெஸ்ஸ சொன்னேன்)..மும்தாஜ்? கும்தாஜ்? சரீனா? ஸீனத் அம்மணம்? (ஹிந்தி) இவங்க போட்ட ட்ரெஸ்ஸெல்லாம் எதை சார்ந்தது? சானியா மிர்சா டென்னிஸ் ஆடும்போது போட்டதுக்கு ? இவங்களையெல்லாம் நீங்க ஏன் அனுமதிச்சீங்க?...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
13-அக்-201919:34:31 IST Report Abuse
தமிழ்வேள் சட்டம் அனுஷ்டானம் என்று எல்லாமே அப்படித்தான் கிறுக்குத்தனமாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
13-அக்-201919:16:27 IST Report Abuse
Sampath Kumar இது எந்த மாடம் ஆனாலும் இழுக்கு பெண் உரிமையை மதம் நிர்வகிப்பது கேவலமானது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X