பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : அக் 13, 2019
Advertisement

ஆறு அருகே இறைச்சி கழிவால் நாற்றம்: இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகள் உள்ளன. அதன் கழிவு, அருகிலுள்ள சரபங்கா ஆற்றுப்பாலம் அருகே, கடைக்காரர்கள் கொட்டி வருகின்றனர். இதனால், இடைப்பாடி நகருக்குள் நுழையும்போதே, துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க, கழிவு கொட்டும் கடைக்காரர்களுக்கு, அபராதம் விதிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஆறும் நாசமாகிவிடும்.

- எம்.பெரியசாமி, இடைப்பாடி.

மின்மோட்டார் பொருத்துவது அவசியம்: காடையாம்பட்டி, சரக்கப்பிள்ளையூர், பிள்ளையார் கோவில் எதிரே, பராமரிப்பற்ற, ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றை, அப்பகுதி இளைஞர்கள் தூர்வாரி, சுற்றுச்சுவர் அமைத்து, தண்ணீர் தொட்டி வைத்துள்ளனர். சுத்தமான தண்ணீர் மேல்மட்ட அளவில் இருந்தும், மின்மோட்டார் இல்லாததால், பயன்படுத்த முடியவில்லை. அதனால், ஒன்றிய அலுவலர்கள் ஆய்வு செய்து, மின்மோட்டர் அமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.பி.ரகுநாத், சரக்கப்பிள்ளையூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X