பொது செய்தி

தமிழ்நாடு

2,500 ஆண்டு பழமையான 2 முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

Added : அக் 13, 2019
Advertisement

ஆத்தூர்: பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான, முதுமக்கள் தாழி, தொன்மை சான்றுகள் கிடைத்துள்ளன.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, தெடாவூரில், சிறு கரடு உள்ளது. அதன் மேற்பகுதியில், விவசாயி அழகுவேல், 55, என்பவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலம் பயன்படுத்தாமல் இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால், மண்ணுக்குள் புதைந்திருந்த இரு தாழி வெளியே தெரிந்தது. இதையறிந்து, நேற்று, வரலாற்று ஆய்வு மையத்தலைவர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர்கள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: முதுமக்கள் தாழியின், மேல்விளிம்பு (கழுத்து பகுதி) உடைந்துள்ளது. ஓட்டின் தடிமன், ஒரு அங்குல அளவு உள்ளது. பெருங்கற்காலத்தில் இறந்தவர்களையோ அல்லது அவர்களது எலும்புகளையோ, பெரிய அளவில், பானைகளில் வைத்து, மண்ணுக்குள் புதைத்து வைத்தனர். அதன் மீது, பெரிய கற்களை கொண்டு, வட்ட வடிவில் அமைந்த கல்வட்டத்தையும், பலகை கற்களைக்கொண்டு கல்திட்டைகளையும் அமைத்து வந்தனர். இந்த காலத்தை, பெருங்கற்காலம் என அழைக்கிறோம். குறிப்பாக, 2,500 ஆண்டு பழமையானவை. கறுப்பு, சிவப்பு பானை ஓடுகளின் உடைந்த பகுதி, கரடு முழுவதும் சிதறி கிடக்கின்றன. மற்றொரு விவசாயி செல்வராஜின் தோட்டத்தில், கல்பதுக்கையுடன், ஐந்து முதுமக்கள் தாழி இருந்துள்ளது. சில ஆண்டுக்கு முன், அவற்றை அகற்றியதாக கூறுகிறார். தெடாவூர் ஏரி, நீரோடை பகுதியில், பெருங்கற்கால மக்கள் வாழ்ந்துள்ளதும், ஆற்றங்கரை பகுதியில், நாகரிகம் சிறந்து விளங்கியதும் அறிய முடிகிறது. 4.5 அடி உயரமுடைய பானை உடைந்துள்ளது. அதன் அருகே, 15 அடி இடைவெளியில், மற்றொரு பானை உள்ளது. அதனுள் எலும்பு உள்ளிட்ட பொருட்கள் கிடந்தன. இப்பகுதியை ஆய்வு செய்தால், மேலும் பல்வேறு வரலாற்று தகவல் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X