பொது செய்தி

தமிழ்நாடு

உலக ஆறுதல் மருத்துவ தின விழிப்புணர்வு ஊர்வலம்

Added : அக் 13, 2019
Share
Advertisement

சேலம்: மருத்துவர்களால் கைவிடப்பட்டு, வாழ்வின் கடைசி தருணத்தில் உள்ளவர்களுக்கு, உடல், மனம், ஆன்மிக ரீதியாக அடைக்கலம் கொடுக்கும், உலக ஆறுதல் மருத்துவ தினம், நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி, சேலம், ரோட்டரி சங்கம் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. லேடிஸ் சர்க்கிள் 44 இணைந்து நடத்திய ஊர்வலத்தை, ரோட்டரி தலைவர் பழனியப்பன், டாக்டர் சசிகுமார் தொடங்கி வைத்தனர். கல்லூரி மாணவ, மாணவியர், விழிப்புணர்வு வாசகம் எழுதிய அட்டைகளை ஏந்தியபடி, ஊர்வலமாகச் சென்றனர். சேலம், அரசு மருத்துவமனையில் புறப்பட்ட ஊர்வலம், அண்ணா பூங்கா வழியாக சென்று, ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தை அடைந்தது. அங்கு, ஆறுதல் மருத்துவம் தொடர்பாக, மாணவ, மாணவியருக்கு, ஓவியப்போட்டி நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X